வணக்கம்!
ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரனுக்கு மறைவு வீட்டில் குரு இருந்தால் அவர்க்கு கடன் இருந்துக்கொண்டே இருக்கும் என்பது சோதிடவிதி.
சந்திரனுக்கு மறைவு இடத்தில் குரு இருக்கும்பொழுது ஒரு சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட கடன் ஏற்படுவது உண்டு. அனுபவத்தில் பலர் நன்றாக இருக்கின்றனர். சோதிடவிதி பொய் கிடையாது அதற்க்காக இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்களுக்கு கடன் இல்லாமல் இருந்தாலும் எப்பொழுதும் ஒரு கடன் இருப்பது போல் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்களிடம் பணம் இருந்தால் கூட நீங்கள் வீட்டிற்க்கு தேவையான பொருட்களை மாததவணையில் செலுத்துவது போல நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு பணத்தை செலுத்தலாம்.
சந்திரனுக்கு ஆறாவது வீட்டில் குரு இருக்கும்பொழுது ஏதாவது நோய் வந்து படுத்தி எடுக்கும் என்பதற்க்காக நீங்கள் இப்படிப்பட்ட கடனை வாங்கி வைத்துக்கொண்டால் ஒரளவு நன்றாக வாழலாம்.
மாததவணையில் வாங்காமல் கடனை ஏதோ ஒரு நபரிடம் வாங்கினால் அதனை திருப்பிக்கொடுக்கும்பொழுது கொஞ்சம் இழுத்துக்கொடுக்கலாம். அவர் கொஞ்சம் திட்டினாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment