Followers

Wednesday, January 18, 2017

உழைப்பை கற்றுக்கொள்ளவேண்டும்


ணக்கம்!
          லீவ் மூடு என்பது இருக்கவேண்டும் ஆனால் அது ரொம்ப காலத்திற்க்கு இருக்ககூடாது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து அதே மூடில் இருப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதனை எல்லாம் விட்டுவிட பாருங்கள்.

ஒரு சந்நியாசியை பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். அதாவது நாம் சும்மா கார்ப்பரேட் சாமியார்கள் என்று திட்டிக் கொண்டு இருப்போம் ஆனால் அவன் உழைப்பது மாதிரி இல்லறத்தில் இருபவர் ஒருவரும் உழைப்பது கிடையாது.

எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் பாருங்கள் அந்த உழைப்பை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நம்ம ஆளுங்க அடுத்தவனை பார்த்து திட்டத்தான் செய்வார்கள் ஒழிய அடுத்தவனிடம் இருந்து கற்றுக்கொள்வது கிடையாது.

நான் நிறைய உதாரணத்தை சொல்லலாம் ஆனால் ஒரு சாமியாரை ஏன் உதாரணமாக சொல்லுகிறேன் என்றால் எதுவும் தேவையில்லை என்று இருந்தாலும் அவன் உழைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் பாருங்கள் அந்த உழைப்பு அனைவருக்கும் இருந்தால் போதும். நாம் லீவ் மூடு என்பதை நம் வாழ்நாளில் கொண்டு வரமாட்டோம்.

மாதத்தில் ஒரு பண்டிகை வந்தால் அந்த பண்டிகை வைத்தே அந்த வாரம் முழுவதும் சோம்பேறியான மனநிலையை உருவாக்கவேண்டாம் என்பதற்க்காக தான் இந்த பதிவை தந்தேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: