Followers

Saturday, January 7, 2017

பச்சைப்பரப்புதல் மாவிளக்கு


வணக்கம்!
          பச்சைப்பரப்புதலை எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. அனைவருக்கும் மறுபடியும் ஞாபகம் படுத்த இந்த பதிவை மீண்டும் தருகிறேன்.

உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு உங்களின் வீட்டிலேயே செய்யும் பூஜை இது. இந்த பூஜை செய்வதால் உங்களின் குலதெய்வம் மனமிரங்கி உங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக்கொடுக்கும். உங்களின் குலம் தழைத்து சிறந்து விளங்கும். 

பச்சைப்பரப்புதலைப்பற்றி நிறைய பதிவுகளை தந்திருக்கிறேன். அதனை எல்லாம் படித்து பாருங்கள். பச்சைப்பரப்புதல் செய்யும்பொழுது மாவிளக்கு முக்கியபங்கு வகிக்கிறது. தற்பொழுது உள்ளவர்களுக்கு மாவிளக்கு செய்வது கடினமாக இருக்கின்றது என்று சொல்லுவார்கள்

மாவிளக்கை பிடிப்பது எப்படி என்று தெரியவில்லை என்று சொல்லுவார்கள். நம்முடைய தாய் சொன்னால் தான் நமக்கு தெரியும். சொல்லிக்கொடுக்காதது அவர்களின் தவறு. இந்த தலைமுறைக்கு இதனை சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு தாயின் கடமை.

மாவிளக்கை பிடிப்பதில் ஒரு சின்ன டெக்னிக் இருக்கின்றது. மாவிளக்கு மாவு உடைந்துவிடுகிறது என்று சொல்லுகின்றார்கள் அல்லவா. இது உடையாமல் இருப்பதற்க்கு மாவிளக்கில் சேர்க்கப்படும் நாட்டுசர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வாங்கி நன்றாக நசுக்கி அதனை மாவோடு சேர்த்து பிசைந்தால் உங்களின் மாவிளக்கு உடையாமல் நீங்கள் நினைக்கு அளவுக்கு வரும்.

இனிவரும் நாட்களில் பச்சைப்பரப்புதல் செய்யும்பொழுது இதனை கடைபிடித்து வாருங்கள். பச்சைப்பரப்புதல் செய்து உங்களின் குடும்பத்தை மேம்படுத்துங்கள்.

நாளை நடைபெறும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள் 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள் 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்.
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள். 

ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள். 
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
 பல்லடத்தை சேர்ந்த திரு காசிநாதன் அவர்கள். 

கரூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள். 

வழக்கம் போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளனர். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: