Followers

Tuesday, January 24, 2017

பரிகாரம்


வணக்கம்!
         சனி மற்றும் செவ்வாய் பரிகாரத்திற்க்கு தற்பொழுது ஒவ்வொருவராக தங்களின் ஜாதகத்தை அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று ஒரு கேள்வி வருகின்றது. அவர் அவர்களின் விருப்பம் போல் பணம் அனுப்பலாம். பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை அவர் அவர்களுக்கு கண்டிப்பாக பரிகாரம் செய்யப்படும்.

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்து பரிகாரத்தில் கலந்துக்கொள்ள நேரில் வரலாமா என்று கேட்டார். பொதுபரிகாரத்தில் கலந்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. பொதுபரிகாரத்தில் கலந்துக்கொள்ளும்பொழுது அடுத்தவர்களுக்கும் பரிகாரம் செய்வதால் அதில் கலந்துக்கொள்ளவேண்டாம் என்று சொல்லுகிறேன்.

தனிப்பட்ட நபருக்கு மட்டும் செய்வதாக இருந்தால் அதில் நேரிடையாக வந்து கலந்துக்கொள்ளலாம். என்னை வந்து சந்திக்கவேண்டும் என்றால் ஒரு தனிப்பட்ட நாளில் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்புகிறேன். தவறாமல் வாட்ஸ்அப் நம்பரை இணைத்து அனுப்பவேண்டுகிறேன்.

அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்களுக்கு என்று தனிப்பட்ட பரிகாரம் செய்யதேவையில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு என்று தனிப்பட்ட கவனம் எப்பொழுதும் செலுத்திவருவது உண்மை. அவ்வப்பொழுது சரி செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிவருகிறேன்.

விரைவில் சனி செவ்வாய் பரிகாரம் இறுதி அறிவிப்பை வெளியிட உள்ளேன். உடனே உங்களின் ஜாதகத்தை அனுப்பிவைத்துவிடுங்கள். நல்ல வாய்ப்பை தவறவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: