வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தில் நிறைய பதிவுகள் ஐந்தாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டைப்பற்றி சொல்லுவது உண்டு. இந்த வீட்டை எல்லாம் அதிகமாக சோதிடத்தில் ஜாதககதம்பத்தில் மட்டுமே படித்து இருக்கமுடியும்.
இதனை வைத்து தான் உங்களின் வாழ்க்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவது உண்டு. ஒன்றாவது வீடு ஐந்தாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீடு ஆகியவை தான் உங்களின் வாழ்க்கை. மற்றவையும் உண்டு இருந்தாலும் இது தான் முக்கியம்.
உங்களில் லக்கினம் உங்களின் உடலை காட்டும் ஒரு இடம். லக்கனம் நன்றாக இருந்தாலே போதும். எப்படியும் வாழ்வில் முன்னேற்றம் போட்டுவிடலாம். லக்கினம் உங்களை அந்தளவுக்கு உயர்த்தி பிடிக்கும்.
ஐந்தாவது வீடு என்பது உங்களின் பூர்வபுண்ணியம். உங்களின் முன்ஜென்மத்தைப்பற்றி அறியும் ஒரு இடம். இந்த பிறவிக்கு முன்பு நீங்கள் எடுத்த பிறவியை காட்டும் இடம். உங்களின் இரத்தம் இந்த பூமியில் மறுபடியும் விதைக்கும் இடம். உங்களின் குழந்தை பாக்கியத்தை சொன்னேன்.
ஒன்பதாவது வீடு என்பது உங்களின் முந்தைய பிறவிக்கும் முன்னோடி எத்தனை பிறவி இருந்ததோ அனைத்தையும் காட்டக்கூடிய ஒரு இடம் மற்றும் உங்களின் தந்தையை காட்டக்ககூடிய ஒரு இடம்.
உங்களின் லக்கினத்திற்க்கு சுபர்கள் என்று பார்த்தால் ஐந்தாவது வீடு ஒன்பதாவது வீட்டை தான் பார்ப்பார்கள். சோதிடத்தில் அந்தளவுக்கு இந்த வீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இடங்கள்.
அடிக்கடி நான் சொல்லுவது கூட இதனை எல்லாம் நீங்கள் நன்றாக வலுப்படுத்தும்பொழுது வாழ்க்கை ஒரு ஆனந்தமயமான வாழ்க்கையாக அமையும். இந்த மூன்றும் சரியில்லை என்றால் பேசாமல் சந்நியாசியாக போய்விடவேண்டியது தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment