வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலம் வாய்ந்தவையாக மாறிவிட்டால் அவர்களின் வாழ்க்கை நேர்மையான வழியில் இருக்காது. நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் வெளியில் தெரியமாட்டார்கள்.
மறைவு ஸ்தானம் பலப்படும்பொழுது அவர்கள் இல்லறவாழ்க்கையும் அந்தளவுக்கு நன்றாக இருக்காது. நிறைய அரசியல்வாதிகளின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். அவர்கள் திருமணம் நடந்து முடிந்தாலும் அவர்கள் வெளியில் ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள்.
மறைவு ஸ்தானம் பலப்படும் ஆட்கள் வெளியில் நிறைய காரியங்களை செய்தாலும் வீட்டில் உள்ள வேலையை செய்ய தயங்குவார்கள். வீட்டில் உள்ள வேலையை வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து செய்ய சொல்லுவார்கள்.
பெண்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலப்படகூடாது. பெண்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலப்படும்பொழுது அவர்களின் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படும்.
நிறைய பெண்கள் தங்களின் நேர்மையான வழியில் இருந்து தவறி தவறான வழியை தேர்ந்தெடுப்பது கூட மறைவு ஸ்தானம் பலப்படுவதனால் தான் நடக்கிறது.
ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்க்கு கூட அவர்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் அதிகப்பலன் அடைவதால் தான் நடக்கிறது. பல இளைஞர்களின் ஜாதகத்தில் இப்படிபட்ட அமைப்பு இருக்கின்றது. ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அவர்களின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பலப்படகூடாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment