Followers

Tuesday, January 10, 2017

விளையாட்டும் செவ்வாயும்


வணக்கம்!
          ஒருவருக்கும் இளமையில் வரும் செவ்வாய் தசா அவரை மிகச்சிறந்த ஒரு விளையாட்டு வீரராக மாற்றி வைக்கும். இளமையில் வரும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படக்கூடிய ஒன்று. 

செவ்வாய் தசா வரும் ஒவ்வொருவரும் விளையாட்டின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். எனக்கு கூட அப்படி தான் வந்தது. செவ்வாய் தசா நடக்கும்பொழுது விளையாட்டின் மீது அந்தளவுக்கு ஒரு ஈடுபாடு இருந்தது.

தற்பொழுது என்னை பார்த்தால் விளையாட்டு வீரராக தெரியாது வேறு விதமாக தெரியும். செவ்வாய் தசா அப்படி ஒரு பலனை கொடுத்து அதன் மீது ஒரு ஈடுபாட்டை கொடுத்தது. 

விளையாட்டின் மீது தற்பொழுதும் ஒரு ஈடுபாடு இருக்கின்றது. மாலை நேரத்தில் ஒய்வு நேரத்தில் எங்களின் ஊரில் ஏதாவது இளைஞர்கள் விளையாடினால் அவர்களோடு சென்று விளையாடுவது உண்டு. 

ஒரு தசா நடந்து முடிந்தால் கூட அதன் தன்மை கொஞ்சம் அவ்வப்பொழுது வந்து நம்மை இழுத்து செல்லும். செவ்வாய் தசாவும் அப்படி தான் அவ்வப்பொழுது செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: