வணக்கம்!
நண்பர் ஒரு கேள்வி கேட்ருந்தார். சித்தர்களை காணும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கின்றதா என்று கேட்டார். அவர் ஜாதகத்தில் ஏதாவது அதற்க்கு கிரகநிலையில் இருக்கின்றனவா என்பது போல் அந்த கேள்வி இருந்தது.
சித்தர்களை நாம் பார்க்கவேண்டும் என்பதற்க்கு எல்லாம் கிரகநிலைகளை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. உங்களின் தேடுதல் நன்றாக இருந்தாலே போதும். உங்களின் தேடுதல் உண்மையாக இருந்து தேடினால் உங்களுக்கு இந்த உலகத்தில் கிடைக்காதா ஒன்று கிடையாது.
நாம் கொஞ்சநாள்கள் ஒரு விசயத்தை செய்வோம் அதன் பிறகு அதனை விட்டுவிட்டு வேறு ஒன்றுக்கு மாறுவோம். இப்படியே தேடிக்கொண்டே இருந்தால் ஒன்றும் கிடைக்காது. ஒரு விசயத்தை ஆழ்ந்த நம்பிக்கை வைத்து தேடும் குணம் இருந்தால் போதுமானது.
உண்மையில் நமக்கு கிரகநிலைகள் அதற்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதில்லை. தேடுதல் மட்டும் தான்வேண்டும். உலகத்தில் கிரகநிலைகள் சரியில்லாதவர்கள் தான் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.
சித்தர்களை காணவேண்டும் என்பது கூட தேவையில்லை. சித்தர்களை நாம் தொடர்ந்து வணங்கிக்கொண்டு அல்லது அவர்கள் சொன்ன வழியை பின்பற்றிக்கொண்டு இருந்தாலே போதும். அதுவே மிகப்பெரிய புண்ணியம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment