வணக்கம்!
இது பழைய பதிவில் உள்ள கருத்தாக இருந்தாலும் மறுமுறை இதனை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது எனது கடமை. உங்களின் வீடு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த கருத்து.
வீடு சுத்தமாக இருந்தால் தான் வீட்டிற்க்குள் லட்சுமி வாசம்புரிவாள். உங்களின் செல்வநிலை உயரும். உங்களின் வாழ்க்கை நன்றாக செல்லும்.
உங்களின் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக அக்கறை காட்டுங்கள். உங்களின் பூஜையறையில் உள்ள பொருட்கள் எல்லாம் சுத்தமாக இருக்கவேண்டும். அதிகபடியான சுத்தத்தை பூஜையறையில் உள்ள பொருட்களில் காட்டவேண்டும்.
உங்களின் வீட்டில் தேவையில்லாத பொருட்கள் இருந்தால் அதனை உடனே தூக்கியிருந்துவிடுங்கள். அது வேறு காலத்தில் பயன்படும் என்று நீங்கள் நினைத்தால் பொருட்களை வைப்பதற்க்கு என்று உள்ள இடத்தில் அதனை வைத்துவிடுங்கள்.
வீடு நறுமணம் இருந்துக்கொண்டே இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்து செய்துக்கொண்டே இருங்கள். ஒரு சிலர் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யகூடாது என்பார்கள். அதனை பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். சுத்தமாக இருந்தால் தான் காசு வரும்.
சேலம் திருப்பூர் கோயம்புத்தூர் பகுதிக்கு பயணம் இருக்கின்றது. விரைவில் எந்தநாள் என்பதை சொல்லுகிறேன்.
சேலம் திருப்பூர் கோயம்புத்தூர் பகுதிக்கு பயணம் இருக்கின்றது. விரைவில் எந்தநாள் என்பதை சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
ஸ்ரீஅன்னையும் இதையே வலியுறுத்துகிறார்கள்
Post a Comment