வணக்கம்!
புதன்கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக அமைந்துவிட்டால் போதும் அவர் தன்னுடைய மூளையை வைத்தே பல மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். பெரிய அளவில் தன் மூளையை வைத்து அறிவுரை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு சில தீயகிரகத்தின் காரணத்தால் இளமையில் தன்படிப்பு வீணாகபோயிருந்தால் கூட அதன்பிறகு ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள்.
நான் நமது தொழில் காரணமாக பல பேர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அப்படிப்பட்ட சந்திக்கும் வாய்ப்பில் இப்படிப்பட்டவர்களையும் நான் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்கும்பொழுது படித்தவர்கள் கூட அப்படி எல்லாம் சிந்தனை செய்து செயல்பட்டு இருக்கமுடியாது அந்தளவுக்கு செயல்படுகின்றார்கள்.
ஜாதகத்தை வாங்கி பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் புதன் நல்ல நிலைமையில் இருக்கின்றது. புதன் தீயகிரகங்களோடு சேராமல் நல்ல நிலைமையில் இருந்து அவர்களுக்கு இப்படிப்பட்ட அறிவை கொடுக்கின்றது தெரிகிறது.
ஒரு சிலருக்கு புதன் தசாவில் இப்படிப்பட்ட அறிவு கிடைக்கும். தசா முழுவதும் அவர்களுக்கு அப்படிப்பட்ட அறிவை பெற்று சிறந்து விளங்குவார்கள்.
புதன்கிரகம் உங்களின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அதற்கு பரிகாரம் செய்து உங்களின் நுட்பமான அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஒரு சிலருக்கு தொழிலிலும் சிறந்து விளங்க புதன்கிரகத்திற்க்கு பரிகாரம் செய்தால் போதுமானது நல்ல முறையில் சிறந்துவிளங்கலாம். ஏஜென்ட் தொழிலாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment