வணக்கம்!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலைமலரில் நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவரும் குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதலை வெளியிட்டார்கள். நமது தளத்தின் அனுமதி பெற்று அதனை அவர்கள் வெளியிடவில்லை நமது பதிவில் இருந்து எடுத்து போட்டுவிட்டார்கள். நண்பர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார் அதனை வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
ஒரு விதத்தில் அது மகிழ்ச்சி அளிக்ககூடிய ஒன்று பச்சைப்பரப்புதலை அனைவரும் செய்வார்கள். அவர்களின் குலதெய்வத்தின் அருளால் நன்றாக வாழ்வார்கள். பச்சைப்பரப்புதலை முடிந்தளவுக்கு உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்திற்க்கு சொல்லிக்கொடுங்கள்.
பரிகாரம் செய்தவர்கள் மற்றும் தளத்திற்க்கு வரும் அனைவரும் ஒன்றை செய்யுங்கள். எந்த விதத்திலும் எதிர்ப்பு மனநிலையை பிறரிடம் காட்டாதீர்கள். நானும் ஒரு சில காலக்கட்டத்தில் எதிர்ப்பு மனநிலையில் வாழ்ந்து இருக்கிறேன். அதில் இருந்து எனக்கு நல்லது நடக்கவில்லை ஆனால் கெடுதல் தான் நடைபெற்றது.
உங்களின் அக்கம்பக்கம் இருப்பவர்கள் உங்களின் உறவினர்கள் மற்றும் பழகுபவர்களிடம் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கினால் உங்களின் வாழ்க்கை நல்ல விதமாக செல்லாது. நாம் எந்த மனநிலையில் இருக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நமது வாழ்க்கையும் அமையும் என்பதால் இதனை எல்லாம் கடைபிடிக்கவேண்டும்.
இந்த உலகத்திற்க்கு என்ன கொடுக்கிறோம் என்பதில் தான் நமது வாழ்க்கையும் அமையும். நான் நல்லதை கொடுத்தால் எனக்கு நல்லது நடக்கும். நான் தீயதை கொடுத்தால் எனக்கு தீயவை தான் நடக்கும். நன்றாக நினையுங்கள் நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
your whatsup no pls
Post a Comment