வணக்கம்!
நம்முடைய பிரச்சினைக்கு நாம் பிறரை கைகாட்டுவோம். இவரால் தான் நான் நன்றாக இல்லை இவர் நன்றாக இருந்திருந்தால் நான் நன்றாக இருந்திருப்பேன் என்று நம்முடைய தந்தையை சொல்லுவோம். முக்கால்வாசி பிரச்சினைக்கு இவர் தான் காரணம் என்று தந்தை அல்லது தாயை கை காட்டுவார்கள்.
நம்முடைய பிரச்சினைக்கு நாம் தாம் காரணமாக இருக்கமுடியும். பிறரை கைகாட்டிக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக அதற்கு நாம் விடை காணமுடியாது. நான் நிறைய பேர்களிடம் இந்த வார்த்தை தான் சொல்லுவேன். நான் இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு நான் தான் காரணமாக இருக்கமுடியும். பிறரை பழி சுமத்துவது முட்டாள் தனமான ஒன்று.
நாம் தான் காரணம் என்று எடுத்துக்கொண்டு நடந்ததை எல்லாம் அனுபவமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டாலே போதும் நம்முடைய பிரச்சினையில் இருந்து எளிதில் வெளிவந்துவிடலாம். கொஞ்ச காலம் எடுக்கும் ஆனால் கண்டிப்பாக அனைத்திலும் இருந்து வெளிவந்துவிடலாம்.
நம்முடைய தவறுகள் எல்லாமே தோஷங்களாக தான் இருக்கும். இந்த தவறுகளை நீங்கள் சரிசெய்யும்பொழுது கொஞ்சம் வலி இருக்கதான் செய்யும். இந்த வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு நாம் செயல்பட்டால் வெற்றி என்பது கண்டிப்பாக வந்துவிடும்.
கிரகங்களின் தோஷம் எல்லாம் இந்த ஜென்மம் இதற்கு முன் உள்ள ஜென்மங்களின் பிரச்சினையை தான் கொண்டுள்ளது. இந்த தோஷங்களும் எல்லாம் காலத்திலும் வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வருகின்றது. அப்பொழுது மட்டும் கொஞ்சம் பிரச்சினை அதிகமாக இருக்கும். நல்ல குரு கிடைத்தால் அதுவும் வெற்றியாக மாற்றிக்கொள்ளமுடியும்.
நிறைய சோதிடர்கள் வறுமையில் இருக்கின்றனர். நானும் வறுமையில் தான் இருந்தேன் சோதிடம் பார்க்க ஆரம்பித்த பிறகு அது விலகிவிட்டது என்று சொல்லலாம். சோதிடதொழிலில் உள்ளவர்கள் வறுமையில் இருக்கின்றனர். ஏன் என்று சிந்தித்து பார்த்தால் அது சோதிடத்தை தவறுதலாக சொல்லுவதால் இவர்களுக்கே தோஷம் வந்துவிடுகிறது. இவர்களை போட்டு தாக்க ஆரம்பித்துவிடுகிறது.
கிரகங்களை புரிந்துக்கொண்டு நன்றாக பலனை சொல்லவேண்டும். பலனை எதிர்மறையாகவே சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. நல்லவிதமாகவும் நடக்கும் அது எந்த காலம் என்பதையும் சொல்லவேண்டும்.
திறமையான சோதிடனாக இருந்தால் அவன் கொடுக்கும் அறிவுரையால் எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் விலக்கி அவனுக்கு நல்லதை கொடுக்கமுடியும். சோதிடனும் நன்றாக வாழ்வான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment