வணக்கம்!
உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கும் அனைத்து தொழிலுக்கும் காரகம் வகிப்பவர் குரு கிரகம். ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் அவர்க்கு அனைத்து காலங்களிலும் உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிப்பதில்லை. குருகிரகம் வலுபெறும்பொழுது மட்டுமே அவர் உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கலாம்.
குரு கிரகம் எனது ஜாதகத்தில் ஒரளவு நன்றாக தான் இருக்கின்றது ஆனால் ஆரம்பகாலத்தில் இருந்தே உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கவில்லை. தற்பொழுது தான் உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கிறேன்.
பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற ஒரு சின்ன ஆசை இருந்தது. ஒரு வருடகாலம் பங்குவர்த்தகம் நடைபெறும் இடத்தில் இருந்து பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் அதனை நடத்திவந்தார். ஒரு இருபத்திதைந்தாயிரம் பணம் ஏற்பாடு செய்து அதில் கணக்கை துவங்கினேன்.
பங்கு வர்த்தகத்தில் கணக்கை துவங்கியது அவர்களே டிரேடிங் செய்து கொடுப்பார்கள் என்ற டீலில் துவங்கினேன். மனிதனுக்குள்ள ஆசை எனக்கும் வந்தது. கணக்கை துவங்கியவுடன் ஏகாப்பட்ட மனகோட்டை கட்டினேன்.
முதல்நாள் டிரேடிங்கில் இரண்டாயிரம் லாபம் என்றார்கள்.இரண்டாவது நாளில் ஆயிரம் நஷ்டம் என்றார்கள். மூன்றாவது நாளில் பணமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கணக்கு போய்விட்டது பணமும் போய்விட்டது.
பங்குவர்த்தகத்திற்க்கும் நமக்கும் சரிப்பட்ட வராது என்று அன்று முதல் இன்று வரை அந்த பக்கம் தலைவைத்தது கிடையாது ஆனால் ஒன்று செய்தேன். அம்மனை வைத்து நிறைய வேலை பங்கு வர்த்தகத்தில் செய்திருக்கிறேன். நண்பர்கள் வழியில் பங்கு வர்த்தகத்தில் இருந்து இன்று வரை பணம் வருகின்றது.
குரு நன்றாக இருக்கின்றது என்று அனைத்திலும் ஈடுபடமுடியாது. சரியான வழியை தேர்ந்தெடுத்து செயல்படும்பொழுது நாம் வெற்றிபெறமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment