வணக்கம்!
பெரும்பாலும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அந்தந்த காலக்கட்டத்தில் என்ன பிரச்சினை என்பதை மட்டும் ஆராய்ந்து அதற்கு தகுந்தார்போல் தீர்வு சொல்லுவது உண்டு. ஒருவரின் பூர்வ ஜென்ம கர்மாவையும் நன்றாக ஆராய்ந்து அதற்கு நாம் தீர்வை சொன்னால் வந்தவர் சரியான ஒரு தீர்வை பெற்றுவிடுவார்.
பூர்வஜென்மத்தில் உள்ள குறைகளை களையும்பொழுது அவர்களுக்கு தானாகவே நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். பூர்வபுண்ணிய கர்மா எந்தளவுக்கு இவருக்கு இருக்கின்றது அதற்கு தீர்வை நாம் கண்டுபிடித்தால் ஜாதகர் நல்ல பலனை அனுபவிக்கலாம்.
பெரும்பாலான பதிவுகள் பூர்வபுண்ணியத்தைப்பற்றி நாம் எழுதியிருக்கிறோம். இந்த பதிவுகளை எல்லாம் நீங்கள் தேடிப்படித்தாலே உங்களுக்கு பூர்வபுண்ணியத்தைப்பற்றி ஒரு நல்ல ஐடியா கிடைத்துவிடும்.
உங்களின் ஜாதகத்தை எடுத்து ஐந்தாவது வீடாக எந்த வீடு வருகின்றது என்பதை பார்க்கவேண்டும். ஐந்தாவது வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வைபடுகின்றது என்பதையும் பாருங்கள். ஐந்தாவது வீட்டில் எந்த கிரகம் இருக்கின்றது என்பதையும் பாருங்கள்.
ஐந்தாவது வீடு எந்தளவுக்கு பாதிப்படைந்து இருக்கின்றது என்பதை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்துவிடும். ஐந்தாம் பாவம் நல்ல புண்ணியங்களை பெற்று வந்தால் பெரும்பாலும் ஐந்தாவது வீட்டில் தீய கிரகங்கள் இருக்காது.
ஐந்தாவது பாவத்திற்க்கு நல்ல கிரகத்தின் பார்வை கிடைத்தால் நல்லது. குருவின் பார்வை பட்டாலும் நல்லது. இது எப்படிப்பட்ட பலனை உங்களுக்கு தரும் என்றால் உங்களின் ஊரில் நீங்கள் தான் தலைவராக இருப்பீர்கள்.
ஐந்தாவம் பாவம் கெட்டால் உங்களின் சொந்த ஊரில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். உங்களின் பங்காளியே உங்களை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். சொத்து விசயத்தில் உஷாராக இருக்கவேண்டும். சொந்த சொத்தில் பிரச்சினை வரும்.
ஐந்தாவது பாவம் நன்றாக இருக்க என்ன வழி என்று சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. உங்களின் ஜாதகத்தை எடுத்து ஐந்தாவது கிரகம் எது என்று பார்த்து அந்த காரத்துவம் உடையவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். இது ஒரு நல்ல பரிகாரமாக அமையும்.
ஐந்தாவது வீடு அல்லது குரு சம்பந்தப்பட்ட காரத்துவம் உடையவர்களுக்கு நீங்கள் சென்று உதவுவது நல்லது. ஒரு குருவை நீங்கள் ஏற்றுக்கொள்வதும் நல்லது. குலதெய்வத்தை வணங்கலாமே என்று செல்லவேண்டாம் கொஞ்ச காலம் இதனை தவிர்த்துவிட்டு மேலே சொன்னதை மட்டும் செய்து வாருங்கள் அதன்பிறகு குலதெய்வத்தை வணங்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment