வணக்கம்!
ஏதோ ஒரு முன்ஜென்மத்தில் குருவிற்க்கு நான் ஏதோ ஒரு தீங்கு இழைத்து இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நேற்று காலையில் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றது உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து அவர் சரியான பிறகு மதியம் வந்து தான் உங்களுக்கு பதிவை தந்தேன்.
குரு பூர்ணிமா அன்று நமக்கு ஒரு சிக்கல் வருகின்றது என்றால் அது முன்ஜென்மத்தில் ஏதோ ஒரு குருவிற்க்கு நாம் தீங்கு இழைத்திருக்கின்றோம் என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொண்டேன்.
நமக்கு நடக்கும் திடீர் தீங்குகள் அனைத்தும் நம்முடைய முன்ஜென்மத்தில் நடந்த ஒன்றாகவே இருக்கும் என்பது கணிப்பு. நேற்று நிறைய நண்பர்கள் போன் செய்துக்கொண்டே இருந்தனர். மாலை வேளையில் பச்சைப்பரப்புதல் செய்வதற்க்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தேன். காலையில் பரபரப்போடு இருந்த நான் மதியத்திற்க்கு பிறகு தான் குரு பூர்ணிமாவிற்க்காக விஷேச பச்சைப்பரப்புதலை செய்தேன்.
நன்றி கடனை மட்டும் நாம் வைத்துவிடகூடாது அது என்றைக்கும் நமக்கு திருப்பி தாக்கும் என்று இந்த உலகம் எனக்கு நேற்று புரிய வைத்தது. முன்ஜென்மத்தில் நான் செய்த வேலைக்கு இந்த ஜென்மத்தில் எனக்கு தண்டனை வருகின்றது என்றால் இந்த ஜென்மத்தில் நாம் நன்றியை மறக்காமல் இருக்கவேண்டும்.
நமது சூழ்நிலை நமக்கு ஒரு கருத்தை கொடுத்தவர்களோடு தொடர்பு இல்லாமல் செய்யலாம் ஆனால் நாம் அதனை புரிந்துக்கொண்டு அவர்களை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு நன்றியை தெரிவித்தால் கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.
நேற்று பெளர்ணமி நிலவை பார்த்துக்கொண்டு எனக்கு ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு கலையும் கற்றுக்கொடுத்த அனைத்து குருமார்களுக்கும் என்னுடைய நன்றியை மானசீகமாக தெரிவித்தேன். நிலவு தான் இதற்கு சாட்சி.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment