Followers

Friday, July 12, 2019

செல்வவளம்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை அன்று வாரந்தோறும் ஒரு மூலிகை எண்ணெய்யை வைத்து மதிய நேரத்தில் குளித்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருந்தேன். சுக்கிரனின் அருள் கிடைத்து அனைத்து செல்வவளங்களும் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளை ஆடைகளை உடுத்திக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். வெள்ளிக்கிழமை தோறும் வீடுகளை சுத்தமாக வைத்து அதன்பிறகு பூஜையை தொடங்குங்கள் என்றும் சொல்லிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை தோறும் தேனும் நெல்லிக்காயும் சேர்ந்த கலவையை வைத்து படைக்கவேண்டும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை வைத்து சாமிக்கு படைக்கவேண்டும். படைத்தவற்றை எடுத்து வைத்துக்கொள்ளலாம் மீண்டும் அடுத்த வாரம் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு சிலர் அதனை சாப்பிடுவதும் உண்டு. உங்களுக்கு வாரந்தோறும் அதனை புதியதாக வாங்கி படைக்கவேண்டும் என்பதில்லை அதனையே வைத்துக்கொண்டு படைக்கலாம். தேனும் நெல்லிக்காயும் வைத்து நைவேத்தியமாக நாம் படைக்கும்பொழுது செல்வவளம் சேர்ந்துக்கொண்டே இருக்கும்.

தேனில் நன்றாக நெல்லிகாய் ஊறியதாக பார்த்து நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே நீங்கள் இதனை செய்துக்கொள்ளலாம். தேன் மட்டும் வைத்துக்கூட ஒரு சிலர் நைவேத்தியமாக பயன்படுத்துவார்கள். நீங்கள் இரண்டையும் வைத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: