Followers

Saturday, July 13, 2019

தீர்வுகள் பகுதி 3


வணக்கம்!
          நட்சத்திரத்தைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிருந்தேன். கொஞ்சம் வேலை காரணமாக அதனைப்பற்றி எழுதமுடியவில்லை விரைவில் அதனைப்பற்றி எழுதுகிறேன். முதலில் நீங்கள் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் தீர்வு காண்பதற்க்கு உங்களுக்கு உடலில் நல்ல சக்தி வேண்டும்.

உங்களின் உடல் நல்ல வலுவாக இருப்பது போல பார்த்துக்கொள்ளவேண்டும். உங்களின் உடலில் வலு இல்லை என்றால் நீங்கள் உங்களை காப்பாற்றிக்கொள்வதே மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும். மிகுந்த சோர்வாக இருந்தால் உங்களை தூக்கம் தான் ஆக்கிரமித்துக்கொள்ளும்.

உங்களின் உடலில் நல்ல சக்தி இல்லை என்றால் உங்களால் சோர்வாகவே மட்டுமே இருக்கமுடியுமே தவிர உங்களின் மூளை வேலை செய்யாமல் போய்விடும். மூளை நன்றாக வேலை செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு நன்றாக சிந்திக்க முடியும். நீங்கள் சோர்வாக இருந்தால் இருக்கவேண்டிய அனைத்து பீடையும் உங்களை நாடி வந்துவிடும்.

உங்களின் உடலுக்கு எந்த உணவு நல்ல சக்தி கிடைக்கின்றது என்பதை பார்த்து அதனை நன்றாக சாப்பிட்டு உங்களின் உடலை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். இதனை நீங்கள் பராமரித்து வந்தாலே உங்களால் எளிதில் அனைத்து பிரச்சினைக்கு வழி காணமுடியும்.

என்ன உடம்பை வளர்க்க சொல்லுகின்றார் என்று நினைக்கவேண்டாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்ற பழமொழியை மனதில் கொள்ளவேண்டும். உடலில் வலுவை வளர்த்துக்கொண்டால் உங்களால் கடைசி வரை போராடமுடியும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: