வணக்கம்!
நாம் தற்பொழுது செய்கின்ற
காரியம் நமது தலைமுறையை பாதுகாத்து
அது வளர்ச்சியை கொண்டு செல்வது போல
இருக்கவேண்டும். வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றால்
தான் நீங்கள் நல்ல முறையில்
இருந்திருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
நமது தாத்தா வீண் பிரச்சினையை
செய்துக்கொண்டு பாவத்தை செய்து இருந்தால்
இந்த தலைமுறையோடு பரம்பரை நின்றுவிடும். பரம்பரை
வளர்ச்சி இருந்தால் தாத்தா நல்ல மனுஷன்
என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள்
செய்வது கூட இதனை எல்லாம்
பார்த்து அதற்கு தகுந்தார் போல்
நீங்கள் நடக்கவேண்டும். செயல் நம்முடைய பரம்பரை
வளர்ச்சியை நோக்கி இருப்பது போல
பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள்
செய்யும் தவறுக்கு எல்லாம் உங்களின் வாரிசுகளுக்கு
வரும் பாதிப்பு குறைவாக தான் இருக்கும்.
உங்களின் தாத்தா செய்த தவறுகள்
மற்றும் புண்ணியங்களை தாங்கி உங்களின் வாரிசுகள்
இருக்கும். தாத்தாவை போல பேரகுழந்தைகள் இருக்கும்.
உங்களின்
மகனின் வாரிசுகள் நன்றாக இருப்பதற்க்கு நீங்கள்
தற்பொழுது செய்யும் செயல் என்ன அது
நன்றாக இருக்கின்றதா என்பதை பார்த்து செய்யுங்கள்.
தவறான விசயங்கள் செய்தால் முடிந்தவரை அதனை விட்டுவிட்டு நல்ல
செயலை செய்ய ஆரம்பியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment