Followers

Friday, July 19, 2019

ஆடி மாதம்


வணக்கம்!
         ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம் என்று பல வருடங்களாக நாம் பதிவை தந்துக்கொண்டு இருந்தோம். ஆடி மாதத்தில் ஜாதககதம்பத்தை படிக்கும் அனைத்து நண்பர்களையும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தி வையுங்கள் அது ஆண்டு சந்தா என்ற கேட்போம். அனைவரும் நான் கேட்பது போலவே செய்து வருவார்கள்.

இந்த வருடம் ஆடி மாதத்தில் இதனை நான் கேட்கவில்லை அம்மன் கோவில் கட்டும் பணிக்கு என்று நிறைய தொந்தரவுகளை நான் உங்களுக்கு கொடுத்து விட்டதால் இதனை உங்களிடம் கேட்கவில்லை. அம்மன் பூஜைகள் மற்றும் அம்மன் யாகம் எல்லாம் இந்த மாதம் இருக்கின்றது.

இன்று இரவு  நவஅம்மன் (சண்டி) யாகம் தொடங்குகின்றது. நவ அம்மன் யாகத்தை இரவு நேரத்தில் இன்று நடக்க இருக்கின்றது. இது போல பல விஷேசமான பூஜைகள் இருக்கின்றன. ஆடி மாதம் முழுவதும் முடிந்தவரை அருகில் இருக்கும் அம்மன் கோவில் மற்றும் விஷேசமாக இருக்கும் அம்மன் கோவிலுக்கு எல்லாம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஆடி அமாவாசை அன்று உங்களின் முன்னோர்களுக்கு என்று செய்யும் காரியத்தை செய்யலாம் அதோடு நமது தளத்திலும் சிறப்பான ஒரு யாகம் நடைபெறும். அதற்கும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். முடிந்தவரை உங்களின் வீட்டை சுத்தம் செய்து ஆடிவெள்ளிக்கு என்று விஷேச பூஜைகளை செய்யுங்கள்.

ஆடி வெள்ளிக்கிழமை அன்று முன்னோர்களுக்கு விஷேசமாக படையல் இட்டு சாமி கும்பிடுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முடியாதவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையை மட்டும் தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: