Followers

Wednesday, December 12, 2012

ஆன்மீக அனுபவங்கள் 33



வணக்கம் நண்பர்களே !
                               ஆன்மீக அனுபவத்தை படித்துவிட்டு பல பேர் எனக்கு நண்பராக மாறிவிட்டார்கள் அவர்கள் கேட்கும் கேள்வி இவ்வளவு கஷ்டபட்டு தேடிய கருத்தை எல்லாம் நீங்கள் அனைவருக்கும் பொதுவாக தரவேண்டியதானே ஏன் ஒருவருக்கு மட்டும் தருகிறீர்கள் என்று கேட்டார்கள்.

யார் யாருக்கு என்ன கிடைக்கும் என்று தலையில் எழுதியுள்ளதோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். உங்களுக்கு தேவையான கருத்து அனைத்தும் ஆன்மீக அனுபவங்கள் தொடரில் எழுதிவிடுகிறேன் நீங்கள் அதனை படித்து ஒரு குரு வழியாக அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். 

உங்களின் தரத்தை உயர்த்திக்கொள்ளும் வழியை தான் நான் இதில் எழுதிக்கொண்டு உள்ளேன். நீங்கள் இதனை படித்துவிட்டு சென்றுவிடாமல் இதற்கு வழி என்னு என்று பார்த்து உங்களின் தேடுதலை தொடங்க வேண்டும். உங்களின் வாழ்க்கையை மாற்றும் வழி இதில் உள்ளது அதனால் தான் திரும்ப திரும்ப இதனை எழுதிக்கொண்டு உள்ளேன்.

உங்களின் எளிதான தேவைக்கு பிரணாயாமத்தைப்பற்றி எழுதி வருகிறேன். என்னால் முடிந்தளவுக்கு அனைத்து ஆன்மீக தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும். அதற்கான வழிமுறைகளும் கிடைக்கும்.

ஒரு நண்பர் கேட்டார் பிரபஞ்ச சக்தியை எடுக்கும் போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுகிறதா அதனால் கர்மம் கூடுவதற்க்கு வாய்ப்பு இருக்குமே என்று கேட்டார் அதற்கான எனது பதில் அனைத்தும் குரு நாதரின் வழியாக தான் நடைபெறும். கர்மத்தை தொலைப்பதற்க்கான வழியை தான் அதில் இருந்து செய்கிறேன் என்று பதிலை தந்தேன்.

யோகா தியானம் செய்வது எல்லாம் ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. பிரபஞ்ச சக்தியை எடுப்பது என்பது மிகப்பெரிய மனவலிமை நமக்கு வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட ஒரு நண்பர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது சொன்னார் அவர் யோகா தியான வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தேன் சந்திர தசாவில் சனியின் புத்தி வந்தது என்னால் ஒரு வகுப்பு கூட எடுக்கமுடியவில்லை மனது சஞ்சலப்படுகிறது என்று சொன்னார். ஒரு தசாவின் புத்தியை கூட சமாளிக்க முடியவில்லை. கிரகங்களின் தாக்குதலை உங்களால் சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு பிரபஞ்சசக்தி தேவை. 

சனியின் தசாவில் சந்திரபுத்தி பிரச்சினை ஏற்படுத்தும் அதைபோல் சந்திரதசா சனி புத்தி பிரச்சினை ஏற்படுத்தும். இருவருக்கும் அப்படி ஒரு பொருத்தம். மனது அந்தளவுக்கு பிரச்சினையை கொடுத்துவிடும். 

சந்திரன் நல்லநிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை நீங்கள் யோகா தியானம் என்று கற்றுக்கொள்ளலாம். சந்திரன் ஒரு கெட்டகிரகத்தோடு அல்லது கெட்ட கிரகத்தின் நட்சத்திரத்தில் இருந்தால் நீங்கள் பைத்தியமானது போல் உணரவைத்துவிடும். மனது நன்றாக இருந்தால் மட்டுமே ஆன்மீக வாழ்க்கை வாழமுடியும் என்பதை முதலில் மனதில் வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



2 comments:

R.SOLAIYAPPAN said...

Thank your for your advice.

rajeshsubbu said...

//* R.SOLAIYAPPAN said...
Thank your for your advice. *//

தங்கள் வருகைக்கு நன்றி