வணக்கம் நண்பர்களே!
ஆன்மீக அனுபவத்தில் பிராணாயாமம் பற்றி எழுதியிருந்தேன் அதனை படித்துவிட்டு பல நண்பர்கள் அவசியமான பதிவு இதனைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். பிராணாயாமத்தின் தொடர்ச்சி இப்பதிவு
பிராணாயாமம் செய்ய முதலில் அறை நன்றாக காற்றோட்டம் உள்ள அறையாக இருக்கவேண்டும். முதலில் பிராணாயாமம் செய்யபோகிறோம் என்று உடலுக்கு சொல்லவேண்டும் அது எப்படி என்றால் இடது நாசி வழியாக மூச்சை முதலில் இழுக்கவேண்டும் பிறகு வலது நாசிவழியாக மூச்சை விடவேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 20 தடவை செய்யுங்கள் அது போதும். காலஅளவு வேண்டாம் சும்மா இழுத்து இழுத்து செய்யுங்கள் இவ்வாறு கொஞ்ச நாட்கள் செய்தாலே போதும்.
உங்களின் மனதிற்க்கு பிராணாயாம பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் என்ற செய்தி சென்றுவிடும். இதனையே ஒரு மாத காலம் செய்யவேண்டும் அப்படி செய்யும் போது உங்களின் உடல் அதற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக்கொள்ளும்.
பிராணாயாமத்தில் முதலில் மூன்று நிலைகள் உள்ளன அதனை சொல்லிவிடுகிறேன்.
1 பூரகம் மூச்சை உள்ளே இழுப்பது
2 கும்பகம் மூச்சை உள்ளே அடக்குவது
3 ரேசகம் மூச்சை வெளியே விடுதல்.
மூச்சை இழுப்பது அடக்குவது வெளியிடுவது இது தான் இதில் பெயரில் ஒன்றும் கி்டையாது. இதனை செய்யும் போது அதற்கு காலஅளவு இருக்கிறது அந்த கால அளவோடு செய்யும்போது மட்டுமே பிராணாயாமம் நமக்கு கைகொடுக்கும். காலஅளவை பொருத்தவரை எண்ணிக்கை தான் நல்லது.
இந்த எண்ணிக்கை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி எண்ணுவார்கள் அதனால் அதற்கு மந்திரத்தை வைத்தார்கள். மந்திரமும் ஒரு சிலநபர் வேகமாக சொல்லலாம் சில பேர் குறைவாக சொல்லலாம். நடுநிலையாக மந்திரத்தை சொல்லுவது போதும். மந்திரம் என்றால் எந்த மந்திரத்தை எடுத்துக்கொள்ளுவது பிரணவ மந்திரம் தான்.
"ஓம்" என்ற மந்திரம் தான் அது.
எப்படி செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
மூச்சு பயிற்சி மற்றும் பிராணாயாமம் மிகவும் நல்லது.
Tamil Newspaper
//*M. Shanmugam said...
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
மூச்சு பயிற்சி மற்றும் பிராணாயாமம் மிகவும் நல்லது. *//
வருக வணக்கம் நன்றி
Post a Comment