Followers

Thursday, December 13, 2012

தசாநாதன்



வணக்கம் நண்பர்களே!
                                     இப்பதிவில் தசாநாதனின் செயல்பாட்டைப்பற்றி பார்க்கலாம்.

உங்களின் ஜாதகத்தின் ராசிகட்டத்தின் அடியில் தசா இருப்பு என்று வருடம் மாதம் நாள் என்று எழுதி வைத்திருப்பார்கள். இந்த தசா நாதனின் செயல்பாடு தான் உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்திற்க்கு அதிக காரணமாக இருப்பார். ஒன்றன் பின் ஒன்றாக தசா வரும். தசாநாதன் செயல்பாட்டால் அதிக லாபம் அல்லது அதிக கஷ்டம் ஏற்படும். 

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி முக்கியம் அந்த லக்கினாதிபதி அடிப்பட்டால் கூட தசாநாதன் நன்றாக இருக்கும்பட்சத்தில் அனைத்தையும் அந்த தசாநாதன் கொடுத்துவிட்டு செல்வான்.

ஒருவருக்கு ராகு தசா நடைபெறும் போது ஜாலியாக பொழுதை கழிப்பான். ஊரில் அப்படி ஒரு கெட்டபெயரை எடுத்து வைத்திருப்பான். குரு தசா வந்தது என்றால் அப்படியே மாறி சரியான ஆன்மீகவாதியாக மாறிவிடுவான். எந்த ஊர் அவனை தவறாக பேசியதோ அந்த ஊர் அவனை வணங்க ஆரம்பித்துவிடும். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு தசா அந்தளவுக்கு செய்யும். சில பேருக்கு குரு தசா நல்லது செய்யாது குரு தசாவில் கெட்ட பெயர் வாங்கும் ஜாதகமும் இருக்கிறது.

ஒரு சிலர் பார்த்தீர்கள் என்றால் குரு தசாவில் நல்ல ஆன்மீகவாதியாக இருப்பார்கள் சனிதசா வந்தவுடன் அவர்கள் கெடுதல் செய்வதில் படுவல்லவராக மாறிவிடுவார்கள் அனைத்தும் தசா செய்யும் லீலைகள்.

ஒருவன் நல்லது செய்வதும் கெடுதல் செய்வதும் அந்த அந்த தசாநாதன் முடிவு செய்யும். நாம் தேவையில்லாமல் எப்படி இருந்தவன் இப்படி மாறிவிட்டான் என்று அவனை திட்டிக்கொண்டு இருப்போம்.நாம் சோதிடத்தை நன்றாக புரிந்துக்கொண்டோம் என்றால் ஒருவர் மேலும் கோபம் வராது. அனைவர் மேலும் பாசம் தான் வரும்.

பொதுவாக தசாநாதன் உங்களுக்கு எதுவும் கொடுக்காமல் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால் உடனே நீங்கள் தசாநாதனுக்கு தகுந்த பரிகாரம் செய்யவேண்டும். சில தசாக்கள் சுயபுத்தியில் நல்லது செய்யாது பிறகு வரும் புத்தியில் நல்லது செய்யும் எப்படி இருந்தாலும் உங்களுக்கு ஒரு தசா ஆரம்பித்துவிட்டால் அந்த தசாநாதனுக்கு ஒரு அபிஷேகமாவது செய்வது நல்லது. நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் சுயபுத்திதானே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்தீர்கள் என்றால் அடுத்து வரும் புத்தியும் கெடுதல் பலனை கொடுத்துவிடும்போது மனதிற்க்கு கஷ்டமாக இருக்கும்.

சில சுயபுத்திகள் இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெறும். காலத்தை ஏன் வீணாக செலவழிப்பானே சரியான பரிகாரம் செய்து அதன் பலனை பெற்றுவிடவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Sir, excellent lesson. One thing, instead of doing abisegam for dasa naathan, we can help for poor children,s food or education. I guess that will be more effective. Please let me know your suggestion on this.

pratheesh said...

அய்யா கடகலக்கினத்துக்கு 11ம் இடத்தில் ராகு செவ்வாய்யின் நேரடி பார்வை இவருக்கு ராகு திசை நன்மை செய்யுமா ராகு றோகினிநட்சத்திர த்தில் உள்ளார்