Followers

Friday, December 7, 2012

குபேர கிரிவலம்



வணக்கம் நண்பர்களே!
                                      நான் சென்ற வருடம் குபேர கிரிவலம் சென்று வந்ததைப்பற்றி நமது பதிவில் எழுதியிருந்தேன். அதனை படித்த நமது நண்பர்கள் இன்றைய வருடத்தில் குபேர கிரிவலத்தைப்பற்றி அறிவிப்பு விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.

கடந்த ஒரு வாரமாக எனக்கு பல போன்கால்களில் நண்பர்கள் இதனைப்பற்றி தான் கேட்கிறார்கள். குபேர கிரிவலத்தைப்பற்றி வெப்தளங்களில் இதுவரை ஒன்றும் வரவில்லை உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார்கள். எனக்கும் குபேர கிரிவலத்தைப்பற்றி சொன்னவர்களுக்கும் எந்தவித தொடர்புகளும் கிடையாது. கடந்த வருடம் சென்று வந்ததைப்பற்றி தான் எழுதி இருந்தேன். 

கார்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி அன்று குபேரன் திருவண்ணாமலைக்கு வருவதாகவும் குபேர லிங்கத்திற்க்கு பூஜை செய்துவிட்டு செல்வதாகவும் வெப்தளங்களில் படித்து இருக்கிறேன். அவர்கள் சொல்லும் கணக்கை வைத்து பார்த்தால் வரும் 11-12-2012 செவ்வாய்கிழமை அன்று மாதசிவராத்திரியும் பிரதோஷமும் வருகிறது அன்றைய நாளாக தான் இருக்கும் அதனால் அன்றைய நாள் குபேர கிரிவலம் என்று வைத்தக்கொள்ளலாம். பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இரண்டும் வருவதால் அன்று கிரிவலம் செல்வதே சிறப்பான ஒன்று தான் அதனால் நீங்கள் அன்று கிரிவலம் செல்லுங்கள்.

நமது தளத்தில் உள்ள நண்பர்கள் சொன்னார்கள் குபேர கிரிவலம் யாரும் நடத்தவில்லையே என்று நாம் கவலைபடதேவையில்லை நாம் அந்த நேரத்தில் கிரிவலம் செல்வோம் நீங்கள் வாருங்கள் என்று கேட்டார்கள். உண்மையில் இவ்வளவு நாட்கள் நான் பதிவுகளில் எழுதும் போது இவ்வளவு சந்தோஷப்பட்டதில்லை யாராவது ஒருவர் இதனை படித்து வெற்றி பெற்றால் போதும் என்று நினைத்தேன். நான் நினைத்தைவிட இன்று பலர் முன்னேற்ற பாதையில் செல்வதற்க்கான அறிகுறிகள் தென்படும் போதும் இந்த சந்தோஷம் எனக்கு போதும் என்றும் தோன்றுகிறது. 

நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவர்களையும் இந்த குபேர கிரிவலத்திற்க்கு அழைத்துக்கொண்டு செல்லுங்கள். செல்வ செழிப்போடு அடுத்தவர்களும் வாழ அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்திக்கொடுங்கள்.

பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் இதனை பதிவாக வெளியிடுகிறேன்.



நண்பர்களே குபேர கிரிவலத்தைப்பற்றி தங்களின் கருத்தை தாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

KJ said...

Sir, very useful info. Sure I will try to make it up. Thanks a lot.

Sathishkumar GS

சக்தி ராம் said...

மிக்க மிக்க நன்றி.! தங்களின் கட்டுரை மிகவும் உதவியுள்ளது. தாங்கள் கூறியபடியே இந்த வருடம் எவரும் இணையதளத்தில் வெளியிடவில்லை. நானும் பலமுறை அந்த இணையதளத்தின் உரிமையாளர்களை இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சொன்னார்கள், போன வருடம் அவர்கள் இணையத்தளத்தில் தெரிவித்ததால் பொது கூட்டம் எல்லைமீறி போனதால் , அங்கு வந்த காவல் துறையினர் பக்தர்களிடம் விசாரித்ததில் தங்களின் இணையத்தளத்தின் முகவரியை கூறிவிட்டதாக பதிலளித்தனர். இந்த எல்லை மீறிய கூட்டத்தினால் அவர்களுக்கு எங்கு ஏதாவது சட்ட சிக்கல் நேர்ந்திடுமோ என்று விளக்கினர். அதிகாரப்பூர்வமாக குபேர கிரிவலத்தை பற்றி செய்திகள் வெளிவராத நேரத்தில் , எங்கு கிரிவலத்தின் பொழுது கூட்ட நெரிசலால் பாதகம் ஏதேனும் ஏற்ப்பட்டால், இணையதளத்தில் வெளியிடுபவர்களுக்கு கடந்த வருடம் போல் பெயர் சிக்கிவிடும் என கவலைப்படுவதாக பதிலளித்தனர். நான் இந்த வருடம் எந்த நாள் என்று தெரியாமலையே போய்விடும் என வருந்திக்கொண்டிருந்தேன். ஏதோ தங்களின் உதவியால் நான் அறிந்துக்கொண்டேன். மிக்க மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

rajeshsubbu said...

நல்லது சக்தி ராம் தங்களின் பதில் அனைவருக்கும் உபயோகப்படும். கடந்த வருடமும் கூட்டம் அலைமோதியது அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் தான் புரிந்துக்கொள்ள வேண்டும். குபேர லிங்கத்திற்க்கு சென்று வெளியில் நின்று மனதால் நினைத்தாலே போதும்.