காலசர்ப்ப தோஷத்திற்க்கு பரிகாரம் என்ன என்று கேட்டு இருந்தேன் அதனைப்பற்றி ஒரு சில நண்பர்கள் மட்டும் பதில் அனுப்பி இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி.
For me ragu at 6th place and kethu at 12. Which one is heading for me. Ragu or kethu. Except budhan and sevvai, other planets locked in between these. Pl explain sir.
காலசர்ப்ப தோஷம் உடையவர்கள் காளஹாஸ்தி திருநாகேஸ்வரம் செல்லுவதை விட திருகடையூர் செல்வது நல்லது. காலன் என்பன் எமன். எமனை வதம் செய்த இடம் திருகடையூர் அதனால் திருகடையூர் சென்று ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மனை தரிசனம் செய்தால் காலசர்ப்ப தோஷ நிவர்த்தியாகும். காலனையை எட்டி உதைத்த இடம் என்பதால் காலசர்ப்ப தோஷத்திற்க்கு இங்கு சென்றால் உங்களுக்கு தோஷத்தின் கடுமை குறைந்து நன்மை நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
நான் ஒரு இலங்கையன் இந்திய வம்சாவழி.நமது மதத்தில் பாம்பு வடிவத்தால் குறிப்பது மூச்சுக்காற்றையாகும், மனிதன் சுவாசிப்பதை பிராணயாமம் மூலம் முறைப்படுத்தினால் நீண்டகாலம் உயிர்வாழ முடியும் சிவன் மார்கண்டேயருக்கு வாசியோகத்தை அருளி அவரை சிரஞ்சீவியாக்கியது இவ்வாறே சிவன் விதியை அனுசரித்து தன் அடியவரைக் காத்திட்டான் வாசியோகம் பயில்வதால் இத்தோஷத்தின் கடுமை குறையும் குரு வணக்கம் மிக முக்கியம் என்னை இந்த தளத்தை காட்டிய அன்னை அம்பிகைக்கு மனமுருகி நன்றிகூறுகிறேன்
Post a Comment