Followers

Thursday, April 30, 2015

வியாதியும் வாழ்வும்


வணக்கம்!
          நேற்று தஞ்சாவூர் பெரிய கோவில் தேர் இழுக்க சென்று இருந்தேன். தொடர் பயணம் செல்வதால் உங்களுக்கு அதிக பதிவை தரமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. விரைவில் அதற்கு ஒரு தீர்வை காணவேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். 

இன்றைய காலத்தில் முப்பத்தைந்து வயதை கடந்துவிட்டால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வியாதி வந்துவிடுகிறது. அதிலும் கேன்சர் வியாதி வந்து படுத்தும் பாடு கஷ்டமாக இருக்கின்றது. ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லுகிறார்கள். அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லுகிறார்கள்.

இயற்கை காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று சொல்லுகிறார்கள். இயற்கை காய்கறிகளை சாப்பிடும் நபர்களுக்கும் வியாதி வந்துக்கொண்டு தான் இருக்கின்றது.உண்மையில் இயற்கை காய்கறிகள் விலையும் தன்மையில் உள்ள உண்மை தன்மை என்பதே தனிக்கதையே எளிதலாம். 

எங்கள் பகுதியில் நிறைய இயற்கை காய்கறிகள் விளைவிக்கிறார்கள் ஆனால் அதற்கும் உரம் போட்டு தான் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனை இயற்கை காய்கறி என்று சொல்லிக்கொண்டு விற்கிறார்கள்.

வியாதி வராமல் இருக்க ஒன்றை மட்டும் என்னால் சொல்லமுடியும். இதனை செய்வதற்க்கு கடினமாக இருக்கலாம் நான் சோதனை செய்தவரை இதனை செய்கின்றவர்களுக்கு எந்த வியாதியும் வரவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

நான் கண்ட நோய் வராமல் இருக்க செய்யும் ஒரு செயல்

ஒரு மனிதன் விடியற்காலை நான்கு மணிக்குள் எழுந்துவிட்டால் அவனுக்கு எந்த நோயும் வருவதில்லை. நிறைய பேர்களிடம் நான் நேரடியாக பார்த்த மற்றும் கேட்ட விசயம் இது. இதனை செய்வது கடினம் செய்துவிட்டால் அற்புத பலனை அனுபவிக்கலாம்.

நண்பர்களே கோயம்புத்தூர் நாளை மாலை புறப்படுகிறேன். இரண்டு நாட்கள் அங்கு தங்குவதாக திட்டம் இருக்கின்றது. நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன். கடைசி முறை செல்லும்பொழுது சந்திக்காத நண்பர்களையும் இந்த முறை சந்தித்துவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Neenga enge venumnaalum ponga vanga aana engalukku padhiu potteaakanum.