Followers

Saturday, April 25, 2015

ஒரு தெய்வ வழிபாடு


வணக்கம்!
          ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று என்னிடம் ஒரு நண்பர் கேட்டுருந்தார்.

ஒரு மனிதன் நன்றாக சம்பாதித்து உயர்ந்த நிலைக்கு செல்லவேண்டும் என்றால் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவந்தால் போதும். ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தவேண்டும் என்றால் அவன் எல்லா தெய்வத்தையும் வணங்கி வரவேண்டும்.

என்னுடைய வேலை ஆன்மீகம் மட்டுமே. நான் ஆன்மீகத்திற்க்கு பல கோவில்கள் செல்லுவேன். நான் தொழில் செய்தால் ஒரு தெய்வத்தை மட்டும் தான் வணங்குவேன்.

ஒரு கிருத்துவனோ அல்லது முஸ்லீமோ தொழிலில் வெற்றி பெறவேண்டும் என்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்கள் ஆனால் இந்து வெற்றி பெறுவது கடினம். அதற்கு காரணம் பல தெய்வங்களை வணங்குவது.

நம்ம ஆட்கள் சிவன் கோவில் வரை சென்றுவிட்டு வருகிறேன் என்று செல்வார்கள். சிவனை வழிபட்டுவிட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபட்டு விட்டு வழியில் ஏதாவது ஒரு கோவிலுக்கும் சென்றுவிட்டு வருவார்கள். 

பல தெய்வங்களை வைத்தற்க்கு காரணம் அவன் அவனுக்கு என்ன வேண்டுமே அதனை வணங்கி பெற்றுக்கொள்வதற்க்கு வைத்தார்கள். ஏதாவது ஒன்றை நீங்கள் பெறவேண்டும் என்றால் அந்த தெய்வத்தை மட்டும் தொடர்ந்து வணங்கி வரவேண்டும் அந்த தெய்வம் உங்களுக்கு அதனை நடத்திக்கொடுத்த பிறகு அடுத்த தெய்வத்திடம் செல்லலாம்.

நிலம் வேண்டும் என்றால் முருகனை வணங்கி வரவேண்டும். முருகனை வணங்கி வரும் நேரத்தில் அதோடு சனிக்கிரகத்தையும் வணங்கினால் உங்களுக்கு நிலம் கிடைக்காது. பல தெய்வகுறுக்கீடு இருந்தால் அந்த காரியம் நடைபெறாது.

நம்ம ஆட்கள் இரத்தத்தில் ஊறிய விசயம் பல தெய்வங்களை வணங்குவது இதனை திருத்துவது என்பது நடைபெறாத ஒன்று. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: