வணக்கம்!
ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நல்லது என்பதை சொல்லிருக்கிறேன். ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டமாபதி உச்சம் பெற்றால் அந்த நபருக்கு பல சிக்கல் வரும் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள்.
உதாரணத்திற்க்கு மகரராசிக்கு அஷ்டமாபதியான சூரியன் தற்பொழுது உச்சம் பெற்று இருக்கிறது. மகரராசிக்காரர்கள் வண்டி வாகனத்தில் செல்லும்பொழுது எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் விபத்துக்கள் ஏற்படலாம்.
ஒரு சிலருக்கு அஷ்டமாபதி உச்சம் பெற்றால் நல்லது நடக்கும். என்னுடைய நண்பர் ஒருவருக்கு மகரராசி. அவர் பைக் ஒன்று வாங்கியிருந்தார்.பைக் லோன் மூலம் வாங்கியிருந்தார். அவர் பைக் வாங்கி ஆறு மாதக்காலம் ஆகிவிட்டது. பைக் வாங்கிய கம்பெனி அவருக்கு அதற்கான உரிம சான்றிதழ்களை தராமல் இருந்தது. லோன் வழியாக வாங்கி இருப்பதால் உரிம சான்றிதழ் நகலையாவது தந்து இருக்கவேண்டும் ஆனால் அந்த கம்பெனி கொடுக்கவில்லை. பல தடவை அலைந்தும் கொடுக்கவில்லை.
என்னிடம் அவர் சொன்னார். அவரின் ஜாதகத்தை நான் ஏற்கனவே பார்த்து இருந்ததால் அவரிடம் தமிழ் வருடப்பிறப்பிற்க்கு பிறகு கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என்று சொன்னேன். சூரியன் உச்சம் பெற்று இரண்டாவது நாள் அவருக்குரிய உரிமத்தை கம்பெனி கொடுத்தது. ஒரு சிலருக்கு அஷ்டமாபதி உச்சம் பெற்றால் நல்லதும் நடக்கும்.
பல பேர்க்கு நான் மறைவு ஸ்தானத்தில் உள்ள பலனை எடுத்து லக் அடிக்க வைத்திருக்கிறேன். மறைவு ஸ்தானத்தில் பல நல்லது ஒழிந்து இருக்கிறது. பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நல்லதை நாம் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
வணக்கம் திரு.ராஜேஷ்!
அஷ்டமாதிபதி உச்சம் என்ற கட்டுரையை வாசித்தேன். நல்ல தகவல் பகிர்வு. என்னுடைய ஒரு சிறு சந்தேகம் என்னவெனில் மறைவு ஸ்தானத்தின் அதிபதி அஷ்டமத்தில் உச்சம் பெற்றால் அத்ன் பொதுப்பலன் என்னவாக இருக்கும்? இன்னும் குறிப்பாக கேட்கவேண்டுமெனில் மீன லக்னத்திற்கு 12ன் அதிபதி சனி 8ல் உச்சம் அடைந்தால் என்ன பொது பலன்? அந்த சனி 3ம் பார்வையாக 10ம் வீட்டை பார்பதால் தொழில் எவ்வாறு பாதிக்கப்படும்? இதன் பொதுப்பலன் என்னவாக இருக்கும்?
Post a Comment