வணக்கம்!
இன்று நமது அம்மன் கோவிலில் விஷேசம். எங்கள் பகுதியில் இருக்கும் கரம்பயம் மாரியம்மன் கோவில் திருவிழா. மாரியம்மன் கோவிலுக்கு நமது அம்மன் கோவிலில் இருந்து பால்காவடி பால்குடம் எடுத்து செல்வார்கள்.
ஒவ்வொரு ஊருக்கும் மாரியம்மன் காேவில் இருக்கும். பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் எல்லாம் மாரியம்மன் தான் ஊர்காவல்தெய்வமாக இருக்கும். அதற்கு ஆடி அல்லது சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும்.
எங்கள் ஊரில் உள்ள மாரியம்மனுக்கு இன்று பால் குடம் மற்றும் பால்காவடி நமது அம்மன் கோவிலில் இருந்து எடுத்து சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
இன்று இரவு எங்களின் ஊரில் மாரியம்மனுக்கு படையல் நடைபெறும். வருடத்திற்க்கு ஒரு முறை நடைபெறும் இந்த படையல் மிகவும் விஷேசமானது. இதற்கு நைவேத்தியமாக கொழுக்கட்டை செய்வார்கள். உங்களின் ஊரிலும் இப்படிப்பட்ட விஷேசம் இருக்கின்றதா என்பதை சொல்லுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Engal mariammanukku purattaasiyil karuppaddi pachai seyyvom.
Post a Comment