வணக்கம்!
கோயம்புத்தூர் சென்றவுடன் நண்பர் அங்கிருந்து கேரளா செல்ல வேண்டும் என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். முதலில் நாங்கள் தரிசனம் செய்தது குருவாயூரப்பன். குருவாயூர் சென்று தரிசனம் செய்யும்பொழுது நல்ல கூட்டம் இருந்தது. கூட்டம் இருந்தாலும் நல்ல தரிசனம் கிடைத்தது.
கேரளாவை பொறுத்தவரை சாப்பாடு மட்டும் எனக்கு ஒத்துக்கொள்ளாது. சாப்பாடு எனக்கு பிடிக்காது. சைவ உணவு விடுதியை தேடி தேடி அலைவதற்க்குள் காரில் உள்ள பெட்ரோல் தீர்ந்துவிடும்.
கேரளாவில் சாப்பாட்டை கூடுமானவரை நான் தவிர்க்க பார்ப்பேன். சைவஉணவாகமாக இருந்தாலும் அங்கு சாப்பாடு அவ்வளவு கேவலமாக இருக்கும். குருவாயூரில் மட்டும் நல்ல சாப்பாடு கிடைத்தது அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு சென்றுவிட்டோம்.
குருவாயூரை முடித்துக்கொண்டு கொச்சின் செல்வதாக திட்டம். வழியில் கொடுங்கலூர் பகவதி கோவில் இருந்தது ஆனால் அதற்கு செல்லாமல் கொச்சின் சென்றுவிட்டோம். கொச்சின் இருந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசனம் செய்வதற்க்கு சோட்டாணிக்கரை சென்றோம். மாலை நேரத்தில் நல்ல தரிசனம்.
சோட்டாணிக்கரை முடித்துவிட்டு கோயம்புத்தூர் வருவதற்கு இரவு ஒரு மணியாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோயம்புத்தூரிலேயே இருந்தேன். பயணஏற்பாட்டை செய்வர்களுக்கு குறைந்தது முப்பதாயிரத்திற்க்கு மேல் செலவாகிவிடுகிறது. அவர்களுக்கே முழு நேரத்தையும் ஒதுக்கவேண்டியிருக்கிறது. அப்படி இருந்தும் ஒரு சில நண்பர்களை சந்தித்தேன். சந்திக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment