வணக்கம்!
உச்ச கிரகத்தைப்பற்றி பார்த்து வந்தோம். அவ்வப்பொழுது மனதில் என்ன நினைக்கிறானோ அதனைப்பற்றி எழுதுவது உண்டு. தற்பொழுது உச்சகிரகத்தைப்பற்றி எண்ணங்கள் அதிகம் வருவதால் அதனைப்பற்றி நாம் பார்ப்போம்.
பொதுவாக மறைவு ஸ்தான அதிபதி உச்சம்பெறுவது நல்லதல்ல என்று சொன்னாலும் ஒரு சிலருக்கு நல்லது செய்யும் என்பதைப்பற்றி பார்த்தோம்.
சுபக்கிரமான குரு கிரகம் உச்சம் பெற்றால் நல்லது என்று சொல்லுவார்கள். அதே நேரத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு குரு உச்சம் பெறுவது அவ்வளவு சிறப்பான பலனை தராது. அதிலும் ரிஷப ராசிக்காரர்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சம்பந்தமே இல்லாமல் மாட்டிக்கொள்வார்கள். தற்பொழுது குரு கிரகம் உச்சத்தில் தான் உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.
சிம்ம ராசிக்கு குரு கிரகம் அஷ்டமாதியாக வந்தாலும் சிம்மராசிக்கு பெரிய பாதிப்பை தந்துவிடாது. சூரியனின் வீடாக சிம்மம் இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கிறது. இது அனுபவத்தில் நான் பல பேரின் ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.
ஒவ்வொருவரின் ஜாதகத்தை பொறுத்து உச்சம் பெறும் பலம் மாறுபடுகிறது. தசாவையும் நாம் கணக்கில் கொண்டு தான் பலனை சொல்லவேண்டும். எடுத்தோம் கவிழ்தோம் என்று பலனை சொல்லகூடாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment