வணக்கம்!
அரசகாலத்தில் எல்லாம் சோதிடம் சொல்லுபவர்கள் பில்லி சூனியம் வைக்கிறவன். இப்படிப்பட்ட வேலைகளை செய்பவர்களை எல்லாம் அரசன் அழைத்து அவர்களுக்கு வேண்டியதை செய்துக்கொடுத்து ஊருக்கு வெளியில் அல்லது காடுகளுக்கு சென்று தங்கிக்கொள்ள சொல்லிவிடுவார்கள். ஏன் என்றால இவர்கள் ஊருக்குள் இருந்தால் மக்களை சும்மா விடமாட்டார்கள். தேவையில்லாமல் பிரச்சினையை எழுப்பிவிட்டுவிடுவார்கள் என்று அரசன் அப்படி செய்தான். இன்று நிலை எப்படி என்று உங்களுக்கு தெரியும்.
அரசகாலத்தில அந்தபுரத்தை அலங்கரிக்க நிறைய பெண்கள் இருப்பார்கள் என்று புத்தகத்தில் படித்தது உண்டு. அந்த பெண்களை சோதிடர்கள் ஜாதகம் பார்த்து தான் வைத்திருப்பார்களாம். அதாவது அந்த பெண்களுக்கு ஏழாவது வீடு உச்ச வீடாக இருக்கவேண்டும் என்று பார்த்து வைப்பார்களாம். இது நண்பர்கள் சொன்ன கதை.
ஏழாவது வீடு உச்ச சம்பந்தப்பட்ட வீடாக இருந்தால் அந்த பெண்ணை மணப்பவர்கள் பெரியளவில் பிரபலமாகிவிடுவாகள். அவர்களின் வளர்ச்சி கனவில் கூட நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியாக இருக்கும்.
நான் சொன்னதை படித்துவிட்டு எனக்கு அந்த மாதிரி ஜாதக அமைப்பில் தான் பெண் வேண்டும் என்று கேட்காதீர்கள். தேடி தேடி காலம் சென்று தாத்தா மாதிரி ஆகிவிடுவீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment