வணக்கம்!
நண்பர்கள் என்னை சந்திப்பதே அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களை எப்படியாவது மாற்றிக்கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் என்னை சந்திக்கிறார்கள் அல்லது தொடர்புக்கொள்கிறார்கள்.
ஜாதககதம்பத்தில் உள்ள கருத்துக்கள் எல்லாம் ஆன்மீகத்திற்க்குள் என்ன செய்கிறோம் என்பதை உங்களிடம் சொல்லுவதற்க்கு எழுதுகிறேன். சனி மாற்றி தருகிறேன். செவ்வாய் கிரகத்தை மாற்றி தருகிறேன் என்று சொல்லி உங்களிடம் காசு பறிக்கும் வேலை இல்லை.
பொதுவாக நான் பரிகாரம் செய்வதற்க்கு போவது கிடையாது. என்னிடம் வரும் நபர்களிடம் இத்தனை நாளில் உனக்கு நடத்திக்கொடுத்துவிடுகிறேன். காரியம் முடிந்தவுடன் பணத்தை வைத்துவிடவேண்டும் என்று சொல்லிவிடுவேன். சொன்ன நாளில் பணம் அவர்களுக்கு வந்துவிடும். அவர்களும் எனக்கு கொடுத்துவிடுவார்கள். இது தான் இது நாள் வரை நடக்கும் செயல்.
உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதை நான் வெளியில் அதிகம் சொல்லுவதில்லை. யாராவது வந்து எனக்கு அந்த கிரகத்தை மாற்றிக்கொடுங்கள் என்று எல்லாம் கேட்காதீர்கள்.
ஒருவருக்கு உடனே ரிசல்ட் வருவதற்க்கு நல்ல வழியை விட தீயவழி நன்றாக கைகொடுக்கும் ஆனால் நான் அதனை செய்வதில்லை. உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பமும் நன்றாக வரவேண்டும் என்பதற்க்காக பொறுமையாக ரிசல்ட் கொடுக்கிறேன். இதற்க்கும் நாள் கணக்கை வைத்து தான் கொடுக்கிறேன்.
நம்பிக்கையோடு வாருங்கள். நல்லது நடக்கும். உங்களின் மேல் நானும் நம்பிக்கை வைக்கிறேன். அம்மனை வைத்து செய்வோம் நல்லது நடக்கும். கிரகத்தை மாற்றிக்கொடுங்கள் என்று எல்லாம் கேட்காதீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment