வணக்கம்!
புதிய தொடக்கத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் முன்ஜென்மத்தில் இப்படி ஒரு ஆன்மீகப்பயிற்சி மேற்க்கொண்டு இருப்பீர்கள். அப்படி மேற்க்கொண்டு இருக்கும்பொழுது உங்களின் மனம் வேறு ஒன்றை நாடி அந்த பயிற்சியை கெடுத்துவிட்டு மறுபடியும் பிறந்து இருப்பீர்கள்.
நமது பதிவு வருபவர்கள் மட்டும் கிடையாது உலகத்தில் உள்ள ஆன்மீகத்தை நாடும் மக்களின் உண்மையான இருப்பு இது. மனம் தடுக்கிறதை ஒரு சிலர் கர்மா தடுத்துவிட்டது என்று கூட சொல்லுவார்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் ஆன்மீகத்தை நாடி உள்ளீர்கள். முடிவை நோக்கி செல்லும்பொழுது அதில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு இருக்கும். இப்பிறவியில் அது தொடர்கிறது.
இந்த பிறவியில் நமக்கு நிறைய வேலைகள் இருக்கலாம். காலம் கலிகாலம். இந்த வேலையோடு நமது ஆன்மீகபயணமும் அமைந்துவிட்டால் அது நேராக உங்களின் இருப்பை நோக்கி அழைத்துச்சென்றுவிடும்.
நான் புதிய பிளாக்கில் சொல்லும் பயிற்சியை அனைவரும் எடுக்கவேண்டும் என்று தான் நினைக்கிறேன். அதனை பொதுவில் சொல்லமுடியாது. அதோடு ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள் அதற்கு கண்டிப்பாக வந்துவிடுவார்கள் என்பதால் அதனை கட்டணமாக அறிவித்தேன்.
என்னிடம் பணமே இல்லை நான் எப்படி இதனை பயிற்சி எடுப்பது என்கிறீர்களா? என்னை சந்திக்கும்பொழுது கேளுங்கள் அதனைப்பற்றி சொல்லிக்கொடுகிறேன். சந்திக்கும்பொழுது குறைந்த நேரம் இருப்பதால் முழுமையாக சொல்லி விட முடியாது. கொஞ்சம் சொல்லிக்கொடுக்கிறேன். அதனை செய்து வாருங்கள்.
புதிய பிளாக்கில் தினமும் பதிவுகள் வரும். அதில் சொல்லப்படும் கருத்து கடல் அளவுக்கு இருக்கும். நேரில் அந்தளவுக்கு எதிர்பார்க்கமுடியாது. இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக இதில் இணையவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
இனிய வணக்கம் .
புதிய இணைய தளத்தின் இனிய தொடக்கம் எப்போது வரும் என்ற ஆவலுடன் வாசகர்களாகிய நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம் .
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடியில் உதயமாகும் என நம்புகிறோம் .
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
Naan ippodhu inaya mudiyadhu.kanttippaga edhirkaaladhil inaiven.
Post a Comment