வணக்கம்!
தமிழர்களை பொறுத்தரை ஊருக்கு ஊரு ஒரு மாரியம்மனை வைத்து வணங்கி வருவார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் அனைத்திலும் ஊருக்கு நடுவில் மாரியம்மன் கோவில் இருக்கும்.
மாரியம்மன் கோவில் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம். அந்தந்த ஊர்களின் வழக்கப்படி மாரியம்மனுக்கு திருவிழா நடத்துவார்கள்.
மாரியம்மனுக்கு அந்தந்த ஊர்களின் வழக்கப்படி திருவிழா நடத்தினாலும் மாரியம்மனுக்கு ஆவணி மாதம் நடத்தும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று.
ஆவணி மாதம் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் விரதம் இருந்து கடைசி வாரம் திருவிழா நாளில் விரத்தை முடிப்பார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் விரதம் இருந்து ஒரு வேலை சமைத்து படையல் செய்து அந்த நாளில் விரதத்தை முடிப்பார்கள்.
ஆவணியில் வரும் ஞாயிற்றுகிழமை ஒவ்வொருவாரமும் விரதம் இருந்து வரவேண்டும். ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை அன்று மாரியம்மன் கோவில் சென்று விரதத்தை முடிப்பார்கள். நாளை முதல் ஆவணி ஞாயிறு தொடங்குகிறது.
நமது புதிய பிளாக்கில் பல பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து வருகிறேன். ஜாதககதம்பத்தை படிக்கும் அனைத்து நண்பர்களும் இணைந்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment