வணக்கம்!
ஆடி மாதம் சென்று ஆவணி மாதம் வரவுள்ளது. இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நமது பதிவுக்கு வரும் இளம் நண்பர்கள் பல பேருக்கு நான் திருமணம் செய்யும் யோகம் வருகின்றது என்று சொல்லிருப்பேன். அவர்கள் எல்லாம் இனி அந்த காரியம் நடைபெற வேலையை தொடங்கலாம்.
பல இளைஞர்கள் என்னிடம் பணம் இல்லை நான் எப்படி சார் திருமணம் செய்வது என்று கேட்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் சொல்லுவது பணம் வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்யவேண்டும் என்றால் இந்தியாவில் சுமாராக ஆயிரம் பேருக்கு கூட திருமணம் நடக்காது.
ஒருவருக்கு திருமணம் நடைபெற குரு பகவான் அருள் வேண்டும். அவர் அருள் உங்களுக்கு வந்துவிட்டால் அவர் ஒரு பெண்ணையும் பார்க்க வைத்து பணத்தையும் ஏதாவது ஒரு வழியில் கொடுத்துவிடுவார்.நடப்பது நடக்கட்டும் எல்லாம் இறைவன் செயல் என்று கவலைப்படாமல் செயலில் இறங்கி வேலையை செய்யுங்கள்.
ஒரு சிலர் ஒரு சில நல்ல காரியத்திற்க்கும் நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களும் ஆவணி மாதத்தில் இருந்து தொடங்குங்கள். வியாபாரம் செய்பவர்களும் செய்ய ஆரம்பிக்கலாம். இனி எல்லாம் நன்மைக்கே.
புதிய பிளாக்கிற்க்கு வருடசந்தா பனிரெண்டாயிரம் செலுத்திவிட்டு தங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். விரைவில் உதயமாக உள்ளது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment