வணக்கம்!
நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லும் அறிவுரை. ஜாதகத்தில் இருக்கும் கிரகத்தை கண்டு பயப்படதேவையில்லை. நமக்கு இப்படிப்பட்ட தோஷம் வந்துவிட்டதே நாம் என்ன செய்யபோகிறோம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருக்காமல் அதற்கான வழியை தேடிக்கொள்ளுங்கள்.
ஆன்மீகவழியில் ஈடுபட்டு உங்களின் குறையை போக்கிக்கொள்ள முடியும். ஒன்பது கிரகங்களும் எந்த கட்டத்திலாவது அமர தான் செய்யும். அந்த கிரகம் அங்கு அமர்ந்து இந்த தோஷத்தை தருகிறது என்று நீங்கள் பயப்படதேவையில்லை.
ஒருவருக்கு ஒன்று உடனே கிடைத்துவிடும் ஒருவருக்கு அது உடனே கிடைக்காது. கிடைக்காது என்பது இல்லை கிடைக்கும் அது கொஞ்ச நாள் ஆகும்.அதற்காக நீங்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அவ்வளவு தான். நீங்கள் முதலிலேயே அது கிடைக்காது என்று உங்களின் மனதில் செட் செய்துவிட்டால் அது எங்கு தேடியும் கிடைக்காது.
எத்தனையோ ஜாதகத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு ஜாதகத்தையும் எடுத்து பார்த்தால் திருமண வீடு எதாவது ஒருவிதத்தில் கெட்டு தான் இருக்கும் ஆனால் திருமணம் அனைவருக்கும் நடந்துவிடும். ஒன்று அல்லது இரண்டு பேர்க்கு நடக்காமல் இருக்கலாம். அது அவர்கள் செய்யும் தவறே தவிர கிரகங்கள் செய்யும் தவறாக இருக்காது. கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு அனைத்திற்க்கும் வழி உண்டு என்று யோசித்தால் வெற்றி கிடைக்கும்.
நமது ஆன்மீக பயிற்சி பிளாக்கில் இன்று புதிய பயிற்சி ஒன்று கொடுத்துள்ளேன். இணைந்த நண்பர்கள் படித்து செய்யுங்கள்.
இணையாத நண்பர்கள் புதிய பிளாக்கில் உடனே இணைந்துவிடுங்கள். உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரு நல்ல விசயமாக அது அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Adikkadi padhivu podunga.
Post a Comment