Followers

Thursday, August 13, 2015

திருமணம்


வணக்கம்!
                     திருமணத்தைப்பற்றி ஒரு பதிவில் சொன்னவுடன் நமது நண்பர்கள் சிலர் அவர்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி சில கேள்விகளை கேட்டனர்.

திருமணத்திற்க்கு மட்டும் தான் நமது மக்கள் பல பேர் ஜாதகத்தையே வைத்திருப்பார்கள். திருமணத்திற்க்கு அந்தளவுக்கு முக்கியதுவமாக ஜாதகம் தேவைப்படுகிறது.

திருமணத்திற்க்கு ஜாதகம் தேவைப்படுவது உண்மை தான் அதே நேரத்தில் வயது முப்பதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஜாதகத்தை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். முப்பது வயதுக்கு மேல் ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தால் நடக்கிற கல்யாணமும் நடக்காமல் போய்விடும்.

தற்பொழுது பல பேருக்கு திருமணம் நடப்பது மிகப்பெரிய காரியமாக இருக்கின்றது. இதனை படிக்கும் பெற்றோர்களாக இருந்தால் கண்டிப்பாக முப்பது வயதிற்க்குள் திருமண ஏற்பாட்டை உங்களின் மகன் அல்லது மகளுக்கு ஏற்பாடு செய்து வைத்துவிடுங்கள். முப்பது வயதை தாண்டிவிட்டால் அப்புறம் என்ன தான் குருப்பலன் வந்தாலும் நடப்பது கடினமாக இருக்கின்றது.

பல திருமணங்கள் நடக்காமல் போவதற்க்கும் சோதிடர்கள் காரணமாக இருக்கின்றனர் என்று சொன்னால் அது தவறு கிடையாது. ஏன் என்றால் நடக்கின்ற திருமணத்தையும் ஏதாவது சொல்லி நடக்கவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் ஏதாவது ஒன்றை சொல்லி தட்டி கழிப்பதும் உண்டு.

முப்பது வயதிற்க்கு மேல் ஆகிவிட்டால் நீங்களாகவே பெண்ணை பார்த்து எந்த ஜாதகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருமணம் செய்துக்கொள்ளுங்கள். 

தற்பொழுது எல்லாம் அவன் அவன் குட்டி சோதிடராகவே மாறிவிட்டனர். எனது நண்பர் ஒருவர் இருந்தார் அவருக்கு சோதிடம் தெரியும். அவருக்கு திருணம் ஆகவில்லை. அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகத்தை அவரே பார்ப்பது அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு இன்றைய நாள் வரை திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு வயது நாற்பது ஆகிவிட்டது.

வயது ஆக ஆக ஜாதகத்தை ஓரம் வைத்துவிட்டு வருவதை ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லை ஆயுள் முழுவதும் திருமணம் நடைபெறாது. சோதிடராக இருந்துக்கொண்டு இதனை நான் சொல்லகூடாது. நண்பர்களுக்கு ஒரு அறிவுரையாக இதனை நான் சொல்லுகிறேன்

நமது புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு இன்று ஒரு செல்வவளத்தைப்பற்றி ஒரு பதிவை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன். படித்துவிட்டு பயன்பெறுங்கள். விரைவில் புதிய தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: