வணக்கம்!
இராகு தசா நடப்பவர்கள் திருமணம் செய்யும்பொழுது அதிக தடை ஏற்படும். திருமணம் அவ்வளவு எளிதில் கைகூடாது. திருமண புரோக்கர்கருக்கு ஏகாப்பட்ட பணம் கொடுத்து வரனை பார்க்க நேர்ந்திருக்கும். அப்படி இருந்தும் வரன் அமையவில்லை என்று நினைப்பவர்கள் கீழே உள்ளது போல் செய்யுங்கள்.
இராகு தசா நடந்தால் திருமணத்தில் ஏகாப்பட்ட குழப்பம் இருக்கும். திருமணம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்று கூட மனதில் தோன்றும். இராகு மனதை கெடுப்பதால் இந்த நிலை என்று நினைத்துக்கொண்டு திருமணத்தை செய்துக்கொள்ளுங்கள்.
பெண் அல்லது ஆண் அழகாக இருக்கவேண்டும் என்று நினைக்கவேண்டாம். ஏதோ நல்ல குடும்பத்தில் பிறந்த வரனாக இருந்தாலு் போதும் என்று நினையுங்கள். காதல் திருமணம் நடப்பதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். பிற மதங்களில் உள்ளவர்களை திருமணம் செய்ய நினைப்பீர்கள். காதல் ஏற்பட்டால் செய்துக்கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
திருமணம் நடைபெறவில்லை என்றால் சென்னை டூ மாமல்லபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை என்ற ஊரில் அமைந்திருக்கும் பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் முருகனுக்கும் சென்றுவரலாம். உங்களின் பகுதியில் திருமணத்திற்க்கு என்று ஒரு சில ஸ்தலங்கள் இருக்கும் அங்கு சென்று வழிபட்டுவிட்டு வாருங்கள். தடைபடுகின்ற திருமணம் நடைபெறும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
ஐயா எனக்கு ராகு தசையில் தான் திருமணம் நடந்தது... அதிகம் அலையவில்லை. ஒரே ஒரு பெண் தான் பார்த்தேன், மணமுடித்துவிட்டேன்... :)
வணக்கம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களை போல் அனைவருக்கும் நடந்தால் நல்லது.
நன்றி
Post a Comment