வணக்கம்!
பாக்கியஸ்தானம் என்பதை பார்த்தவுடன் அதில் இருந்து பல கருத்துக்கள் நமது எண்ணத்திற்க்கு வந்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று சகோதரர்கள் இருந்தால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் சொத்தை சரிபங்காக பிரித்துக்கொள்ளாமல் முடிந்தளவுக்கு அடுத்தவரை ஏமாற்றி எடுத்துவிடவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
ஒரு சிலர் பங்கை எடுக்கமுடியவில்லை என்றால் கோர்ட் கேஷ் என்று போட்டு தானும் வாழாமல் பிறரையும் வாழாமல் வைத்து விடுகின்றனர். ஒருவருக்கு தந்தையை காட்டும் ஸ்தானம் என்பது பாக்கியஸ்தானம். தந்தை பிரச்சினையை செய்துக்கொண்டு இருக்கின்றார் என்றால் மகன் எப்படி நன்றாக வாழ்வார். தான் சேர்க்கும் சொத்தைவிட தான் சேர்க்கும் புண்ணியம் தான் தன் பிள்ளைகளை நன்றாக வாழவைக்கும்.
பல இடங்களில் என்னுடைய அனுபவத்தில் இதனை நான் பார்த்து இருக்கின்றேன். புண்ணியம் சேர்ப்பதைவிட சொத்து அதிகம் சேர்க்கிறார்கள். சொத்தை அடுத்தவர்களிடம் ஏமாற்றி வாங்காமல் உழைத்து வாங்குங்கள். நிறைய புண்ணியத்தை செய்யும்பொழுது உங்களின் வாரிசு நன்றாக வாழும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Naatukku dhevaiyana karudhu
Post a Comment