பொதுவாக சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலா ராசியை திருமணம் செய்யும் நபர்கள் உயர்ந்துவிடுவார்கள். வாழ்க்கையில் அவர்கள் திருமண பேச்சு தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்களின் உயர்வு சிறந்து விளங்கும்.
சனியின் வீடான மகரத்தை ராசியாக உடையவர்கள் மற்றும் கும்பராசியை உடையவர்கள் சுக்கிரனின் ராசியை உடையவர்களை திருமணம் செய்தால் நல்ல வளர்ச்சி இருக்கின்றது. ஒரு சிலருக்கு வேறு ஏதாவது கிரகபிரச்சினை இருந்தால் மட்டுமே வளர்ச்சி தடைபடுமே தவிர மற்றவர்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.
சும்மா சுத்திக்கொண்டு இருந்தான்யா திருமணம் முடிவடைந்தவுடன் ஆள் பெரியளவில் உயர்ந்துவிட்டான்யா என்று சொல்லுவார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் வந்த வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் அருமையான ஒரு நிலையில் அமர்ந்து இருப்பார்.
நிறைய விசயங்களை சோதிடர்களே மறைத்துவிடுவார்கள். ஏன் என்றால் உனக்கு திருமணம் ஆனதில் இருந்து தான் பிரச்சினை என்று சொன்னால் திருமணவாழ்க்கை பிரச்சினையை சந்தித்துவிடும் என்பதால் அதனை மறைத்துவிடுவார்கள்.
பெண் நன்றாக இருக்கின்றது அதாவது அழகாக இருக்கின்றது. சுக்கிரன் வலுவாக இருந்தால் தான் அழகாக இருக்கமுடியும் என்று சொல்லிக்கொண்டு திருமணத்தை முடித்துவிடுவார்கள். திருமணம் முடிந்தபிறகு அவர்களின் வாழ்க்கை பல தோல்விகளை சந்திப்பதும் உண்டு. சுக்கிரன் அழகை நிறைய கொடுத்தால் செல்வவளத்தை கொடுக்காது அதனையும் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும்.
இனிமேல் திருமணம் செய்யும் நபர்கள் கொஞ்சம் கருப்பான பெண்ணையும் பார்த்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதுவரை இதனை நான் சொன்னதில்லை தற்சமயம் சொல்லிவிட்டேன்.
ஆணாக இருந்து உங்களின் மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் மறைவுஸ்தானத்தில் இருந்தால் உங்களின் வளர்ச்சி தடைபடும். உங்களின் மாமனார் வீடு செல்வம் கொழிக்கும். நீங்கள் பிச்சை எடுப்பீர்கள். அதனை சரி செய்யவதற்க்கு பல டெக்னிக்கல்லை கையாளவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment