Followers

Sunday, October 1, 2017

இனிய தொடக்கம்


வணக்கம்!
          ஒருவர் வெற்றி அடைய வேண்டும் என்றால் சோதிடம் சொல்லுவது மாதிரி தன்னை மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெற்றுவிடலாம்.

அடிப்படையாகவே ஒரு சில விசயத்தை நாம் செய்துவைத்துவிட்டால் அதன் பிறகு வெற்றி என்பது அதுவாகவே நம்மை தேடி வந்துவிடும். அதனைப்பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். அதனை நீங்களும் பின்பற்றி வரலாம்.

நாம் தொடக்க காலத்தில் SBI வங்கி கணக்கை வைத்துக்கொண்டு இருந்தோம். ஒரு சில காலக்கட்டத்தில் இந்த வங்கி கணக்கு பிரச்சினையாகி இந்த வங்கி கணக்கை செயல்படுத்த முடியாமல் சென்றது. அதன் பிறகு வங்கி என்னை அழைத்து புதிய கணக்கை எங்களது வங்கியில் ஆரம்பித்துக்கொள்ளுங்கள் என்றார்கள் நான் செல்லவில்லை.

கொஞ்சம் சிந்தித்து கரூர் வைஸ்ய வங்கி கணக்கில் தொடங்கினோம். ஏன் இப்படி செய்தேன் என்றால் புதனின் அருளை பெறவேண்டும் அதற்கு இந்த வங்கியை தேர்ந்தெடுத்தோம். இன்று வரை அது செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

வர்த்தகத்திற்க்கு என்று புதன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக இதனை செய்தேன். இன்று வரை அது தொடர்ச்சியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. புதன் கிரகத்திற்க்கு என்று இந்த ஒரு விசயத்தை மட்டும் செய்தேன். 

மற்ற கிரகங்களுக்கு தனித்தனியாக செய்வது உண்டு. மேலே சொன்ன மாதிரி நீங்கள் பல விசயங்களை அடிப்படையிலேயே மாற்றி வைத்துக்கொண்டால் போதும் அது காலம் காலமாக சென்றுக்கொண்டே இருக்கும்.

வாகனத்தில் நாம் என்ன செய்வோம். அதிகப்பட்சம் மக்கள் விரும்புவது என்ன என்றால் வெள்ளை கலரில் கார் வாங்கிவிட்டால் போதும் நமக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும் என்று நினைத்து பல வெள்ளை கார்கள் அதிகபடியாக வெள்ளை நிறத்தில் விற்பனை நடக்கிறது.

சோதிடத்தில் அடிப்படை விதியை வைத்து உங்கள் ராசிக்கு இந்த கலர் நன்றாக இருக்கும் என்று சோதிடர்கள் சொல்லிவிடுவார்கள். உண்மையில் பல வெள்ளை நிற கார்கள் வாங்கியவர்களின் மனைவி பிறரோடு தொடர்பு இருக்கும். எல்லோருக்கும் வெள்ளை நிற கார்கள் சரியாக வராது.

நாம் தவறு செய்துவிடுவோம் அதன் பிறகு என் மகன் சரியில்லை மனைவி சரியில்லை என்று சொல்லுவது மிகவும் தவறான ஒன்று. இவர்கள் செய்யும் தவறுக்கு கடவுளையும் சேர்த்து குறைச்சொல்லிவிடுவார்கள். 

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நாம் தவறு செய்யாமல் இருந்தால் நமக்கு அதிகப்படியான தொந்தரவு வராது. நமக்கு பிரச்சினை நாம் அடிப்படையில் செய்யும் தவறு மட்டுமே. இதனை எல்லாம் ஏற்றுக்கொள்வதற்க்கு உங்களுக்கு மனம் ஒத்துழைக்காது ஆனால் உண்மை இது தான். 

என்னுடைய வீட்டில் ஒழுங்காக கதவை போட்டு பூட்டினால் திருடன் உள்ளே வரமாட்டான். என் வீட்டு கதவை நான் ஒழுங்காக சாத்தாமல் திறந்து வைத்தால் அனைவரும் வந்துவிடுவார்கள். பிரச்சினையில் மாட்டுவது நீங்களாகவே மட்டும் இருக்கும். சின்ன சின்ன விசயத்தில் கூட நாம் சரியாக செயல்பட்டால் வெற்றி உங்களை தேடி வரும்.

அன்புடன்

  • ராஜேஷ்சுப்பு

No comments: