வணக்கம் !
சுபக்கிரகம் என்று சொல்லுவது குருவை முதலில் சொல்லுவார்கள். அடுத்தப்படியாக சொல்லுவது பாவிகளோடு சேராத புதனை. சுபக்கிரக வரிசையில் சுக்கிரனும் வருவார். உங்களின் ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தால் போதும். இதனைப்பற்றி நான் ஏற்கனவே ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன்.
ஒரு சில சோதிடர்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும் என்பார்கள். அது அவர்களின் அனுபவமாக இருக்கலாம். இருவரும் நன்றாக இருந்தால் மட்டுமே யோகத்தை தரமுடியும் என்பார்கள்.
என்னைப்பொறுத்தவரை ஒருவர் நன்றாக இருந்தாலே போதும் என்பது தான் என்னுடைய கருத்து. ஏன் சோதிடத்தில் இருவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்கள்?
இரண்டு பேரும் உங்களை வழிநடத்தும் குரு என்பதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார்கள். ஒரு குரு நம்மை வழிநடத்தினால் அது நம்முடைய வாழ்க்கையை சிறக்க வைக்கும் என்பதால் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
குரு நல்ல பழக்கத்தை உடைய தேவர்களின் குருவார். சுக்கிரன் கொஞ்சம் வித்தியாசப்படும் அதாவது அசூரர்களின் குருவாக இருக்கின்றார். இரண்டு வழிகளில் ஏதாே ஒரு வழியை பின்பற்றினாலும் நாம் வெற்றியாளன் தான். இரண்டு வழியையும் பின்பற்றாமல் இருப்பவர்கள் தான் வீணாக போனவர்கள் என்று சொல்லலாம்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். வரும் பத்தாம் தேதிக்குள் அம்மன் பூஜை நடத்தப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment