வணக்கம்!
கடலில் எழும் அலைகள் போல மனிதனுக்கு மாறி மாறி பிரச்சினைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். ஒரு கிரகங்கள் விட்டால் மறுகிரகம் அடிக்க ஆரம்பிக்கும். அடி என்பது வித்தியாசமாக வந்துக்கொண்டே தான் இருக்கின்றது. அடி இல்லாத மனிதன் இல்லை என்று சொல்லலாம்.
ஒரு சிலர் வெளியில் அடியை சொல்லிவிடுவார்கள் ஒரு சிலர் அடியை வெளியில் சொல்லுவதில்லை. மறைமுகமாக வந்துக்கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கு வாழ்வில் நோய் பிரச்சினை இருக்கும் ஒரு சிலருக்கு பிறரால் பிரச்சினை இருக்கும் இப்படியே வந்துக்கொண்டே இருக்கும்.
நாம் சொல்லுவோம் அவர் எப்படி வாழ்கின்றார் பாருங்கள். சொகுசாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார் என்று சொல்லுவார்கள். அவர்கள் உண்மையில் சொகுசாக வாழ்வது போல வெளியில் காட்டிக்கொள்கிறார் ஆனால் அவருக்கு வெளியில் சொல்லமுடியாத பிரச்சினை இருக்கும். ஒரு சிலருக்கு வெளியில் சொல்லமுடியாத நோய் உள்ளுக்குள்ளே இருக்கும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது. பிரச்சினை வருகின்றது அதனால் நாம் எதுவும் செய்யாமல் இருந்துவிடலாம் என்றும் இருந்துவிடமுடியாது. எப்படியாவது எதையாவது பிடித்து செய்யதான் வேண்டும்.
சுக்கிரதசா நடப்பவர்களுக்கு யோகம் என்று சொல்லுவோம். அவர்கள் படும்பாடு சொல்லவே முடியாது. பெரும்பாலும் சுக்கிரதசா நடப்பவர்களுக்கு நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என்பது அனுபவத்தில் நான் பல பேர்களிடம் பார்த்து இருக்கிறேன்.
பெரிய வியாதிகள் எல்லாம் கூட சுக்கிரதசாவில் வந்து அதனால் தொடர்ச்சியாக கஷ்டப்படுபவர்கள் இருக்கின்றார்கள். என்னிடம் சொல்லி இருக்கின்றார்கள். கேது தசாவே நன்றாக இருந்தது. இந்த சுக்கிரதசா வந்ததில் இருந்து அவ்வளவு கஷ்டம் என்பார்கள்.
சுக்கிரதசாவில் டிக்கெட் வாங்கியவர்களும் இருக்கின்றார்கள். சுக்கிரன் அப்படி ஒரு வேலையையும் செய்து இருக்கின்றது என்பது தான் அனுபவத்தில் உண்மை. சுக்கிரனைப்பற்றி நிறைய நாம் இனிமேல் பார்க்கலாம்.
பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு நாளை முதல் உங்களை கூப்பிட்டு பேசுகிறேன். ஐந்தாம் தேதியோடு பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப கடைசி தேதி என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment