Followers

Tuesday, October 10, 2017

சுக்கிரனுக்கு பரிகாரம்


ணக்கம்!
          சுக்கிரனுக்கு பழைய பதிவில் ஒரு பரிகாரம் சொல்லிருப்பேன். மால்களுக்கு செல்லவேண்டும் என்பது தான் அந்த பரிகாரம். தற்பொழுது உள்ள காலத்தில் மால்கள் சுக்கிரன் காரத்துவம் வகிக்கிறது என்பது குறைந்துக்கொண்டே வருகின்றது.

அனைத்து மக்களும் மால்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு காலத்தில் உயர்ந்த ரகத்தில் இருந்த மால்கள் எல்லாம் தற்பொழுது அனைத்து மக்களும் செல்ல ஆரம்பித்த காரணத்தால் இதனை தேர்ந்தெடுத்து தான் செல்லவேண்டும்.

ஒரு காலத்தில் பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்க்கு ஒரு முறை நான் மால் செல்வது உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை பார்த்து மால் சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஏதாவது சினிமா பார்த்துவிட்டு வருவது உண்டு. தற்பொழுது இதனை அதிகம் செய்வதில்லை.

கடந்த முறை கோயம்புத்தூர் சென்றபொழுது ஒரு மால் புதியதாக திறந்து இருக்கின்றார்கள். வாருங்கள் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று நண்பர் சொன்னார். அந்த பக்கம் ஒரு வேலை இருந்த காரணத்தால் அந்த வேலையை முடித்துவிட்டு அந்த மாலுக்கு சென்றேன்.

மால் பார்த்தால் அது ஒரு மில் போல எனக்கு தோன்றியது. மாலுக்கான கட்டட அமைப்பே கிடையாது. இது சுக்கிரனின் காரத்துவத்தில் வரவே வராது என்று உடனே வந்துவிட்டேன். அந்த ஊருக்கு அது பெரியதாக இருக்கலாம். ஊரில் மால் இல்லை என்றால் செல்லலாம்.

உங்களிடம் பணம் இல்லை என்றால் மால்களுக்கு சென்று வாருங்கள். கொஞ்சம் பணம் இருந்தால் உங்களின் ஊரில் இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று ஒரு காபி சாப்பிட்டு வாருங்கள். கொஞ்சம் அதிகமாக உங்களிடம் பணம் இருந்தால் அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல்குளத்தில் குளித்துவிட்டு வரலாம். சுக்கிரனுக்கு இது ஒரு நல்ல பரிகாரமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: