வணக்கம்!
நாகரீக வளர்ச்சி என்றாலே அது மனிதன் உடுத்தும் உடைகளில் தான் ஆரம்பிக்கிறது. ஒரு நாகரீகம் வளர்ச்சி அடைவதற்க்கு முக்கிய பங்கு வகிப்பது சுக்கிரனின் காரத்துவத்தில் தான் இருக்கின்றது.
நாகரீக வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் இருந்தாலும் ஒரு மனிதனின் உடைகளில் மாற்றத்தை தான் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்வார்கள். ஒரு ஊரில் ஒருவர் வசதி வாய்ப்பு வந்தால் அவர் முதலில் தன்னை வெளிப்படுத்த உடைகளை தான் மாற்றுவார்.
புதிய ஆடைகளை அந்தந்த காலக்கட்டத்திற்க்கு தகுந்தமாதிரி அவர்கள் உடுத்தி தன்னை வெளிக்காட்டுவார்கள். தற்பொழுது அனைவரும் உடுத்துகின்றனர் என்று நினைக்கவேண்டாம். உடைகளின் விலையில் இருக்கலாம்.
பணக்காரர்கள் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள வாகனத்திலும் காட்டிக்கொள்வார்கள் அல்லவா. ஆடம்பரமான கார்களை வாங்குவார்கள். கார்களும் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும். இதிலும் சுக்கிரனின் பங்கு இருக்கின்றது.
நாகரீக வளர்ச்சி என்பது சுக்கிரனின் காரத்துவத்தில் அதிகம் இருக்கின்றது. அது தனிமனிதனின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வளர்ச்சி அடையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment