வணக்கம்!
நேற்று KVB வங்கியைப்பற்றி எழுதியவுடன் நிறைய பேர் அதனைப்பற்றி தான் கேட்டார்கள். KVB வங்கியில் கணக்கை துவங்கினால் உடனே பணம் வந்துவிடாது. உழைப்பு மிக மிக முக்கியம் அதன் பிறகு தான் இந்த மாதிரியான வேலைகள்.
உங்களுக்கு பிடித்தமான ஒன்றை எப்படியும் போராடி பெறுகின்றீர்கள் அல்லவா. அது போல தான் ஒரு சில கிரகங்களின் ஆற்றலையும் நாம் கண்டிப்பாக பெறவேண்டும் என்று நினைக்கும்பொழுது இப்படி செய்து வைத்துவிட்டால் அது நமக்கு கிடைக்கும்.
புதன் எனக்கு ஜாதகத்தில் சாதகமாக இருக்கின்றதா அல்லது பாதகமாக இருக்கின்றதா என்று எல்லாம் நான் பார்த்து இதனை செய்யவில்லை இது எனக்கு கண்டிப்பாக தேவை என்பதனை வைத்து தான் இதனை செய்தேன்.
உங்களுக்கு எது சாதகமாக இருக்கின்றது என்பதை பார்த்தும் செய்துக்கொள்ளலாம் அல்லது இது எனக்கு தேவை என்பதையும் முடிவு செய்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
வங்கி கணக்கு மட்டும் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானித்துவிடாது ஒரு கருவியாக அதனையும் நாம் சாியாக செய்தால் போதும். அதுவும் நமக்கு உறுதுணையாக வந்துவிட்டால் சம்பாதிப்பதை கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment