Followers

Tuesday, October 3, 2017

வெள்ளை கலர்


வணக்கம்!
          கார் வெள்ளை நிறத்தில் வாங்கி வைத்திருக்கிறேன் நீங்கள் சொல்வதை வைத்து பார்த்துவிட்டு என்ன சார் செய்வது என்று கேட்டார்கள்.

கார் வாங்கிவிட்டீர்கள் இனிமேல் என்ன செய்வது அப்படியே வைத்திருங்கள். அதோடு கார் வெள்ளை நிறத்தில் வாங்கி பயன்படுத்தலாம் அதில் தவறு இல்லை. பலருக்கு வெள்ளை நன்றாக வரும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

நம்மை மாற்றிக்கொள்ளும் வழியில் நாம் இருக்கிறோம். வந்தது வரட்டும் இனிமேல் செய்யும்பொழுது அதில் நாம் நன்றாக செயல்பட்டால் போதும். கொஞ்சகாலத்தில் நல்ல மாற்றத்தை நாம் உணரலாம்.

வந்ததை நாம் வைத்திருப்போம் வரப்பாேவதை நாம் மாற்றிக்கொள்வோம். ஒரு சிலருக்கு அவர் அவர்களின் தசாவிற்க்கு தகுந்த மாதிரி கலரும் அமையும். தசாநாதன் நல்ல வலுவாக இருக்கும் பொழுது இது சாத்தியப்படும்.

கண்டிப்பாக இதனை செய்யவேண்டும் என்பது விதி அல்ல. நாம் விரும்பியதை அடைய ஒரு வழியை செய்யவேண்டும். இனிமேல் செய்வதை செய்யுங்கள்.

சுக்கிரதசா வரும்பொழுது அவர்களுக்கு வெள்ளை நிறம் நன்றாக இருக்கும். சுக்கிரனின் பலம் அதிகரிக்க வெள்ளை நிறத்தில் கார் வைத்திருப்பதும் ஒரு வழி என்பதால் அதனை வைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: