வணக்கம்!
முக்கூட்டு கிரகங்கள் என்று சொல்லப்படும் சூரியன் புதன் சுக்கிரன் மூன்று கிரகங்களும் சேர்ந்து தான் அதிகப்பட்சம் இருக்கும். சூரியனோடு தான் புதன் சுக்கிரன் இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் விலகி இருக்கும்.
சூரியனோடு சேரும் கிரகம் அஸ்தமன தோஷம் அடையும் என்பார்கள். பெரும்பாலும் புதன் அல்லது சுக்கிரன் அஸ்தமத்தில் தான் இருக்கும். அஸ்தமம் அடைந்துவிட்டால் அந்த கிரகம் வலு இழந்துவிடும் என்பார்கள்.
அஸ்தமத்திலேயே பல கருத்துக்கள் இருக்கின்றன. புதனுக்கு மட்டும் அஸ்தமம் இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் சுக்கிரனுக்கும் அஸ்தமம் என்று சொல்லுவார்கள். எது எப்படியே அஸ்தமம் என்ற வார்த்தை வந்துவிட்டது.
பத்து டிகிரிக்குள் இரு கிரகங்களும் வந்தாலும் அது அஸ்தமம் வந்துவிடும் என்பார்கள். அஸ்தமம் அடைந்த கிரகங்கள் தன்னுடைய பலனை காலதாமதமாக கொடுக்கின்றது என்பது தான் உண்மையாக இருக்கின்றது.
சுக்கிரன் அஸ்தமம் அடைந்தால் அவர் கொடுக்க வேண்டிய திருமணத்தை கொஞ்சம் காலம் தாழ்த்தி கொடுப்பார் என்று கருத்தில் வைத்துக்கொள்ளலாம். சுக்கிரனால் வரும் அனைத்தும் காலம் தாழ்த்தி கொடுக்கும் என்பது அனுபவத்தில் பல ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment