வணக்கம்!
ஏழரைச்சனி அமைந்தால் அவர்களுக்கு அவ்வப்பொழுது நோய் தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருக்கும். இதனை அலட்சியமாக விட்டுவிடகூடாது. ஏழரைச்சனி காலத்தில் தான் அதிகமாக செலவை கொடுக்கின்றது. இது மருத்துவசெலவுக்கு முக்கால்வாசி போய்விடும் என்பதால் ஏழரைச்சனி காலத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.
ஏழரை நடந்துக்கொண்டு இருக்கும் நண்பர்கள் உங்களால் முடிந்த சிறிய பரிகாரமான சனிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வாருங்கள். ஏழ்மை என்பதை சனிபகவானை குறிக்கும். உங்களுக்கு தெரிந்த ஏழ்மையாக இருக்கும் நபர்களுக்கு உதவலாம்.
ஒரு மனிதனுக்கு கர்மாவை போக்கும் ஒரு நிகழ்வாக ஏழரைக்காலம் வருகின்றது. கர்மாவை வெளிக்கொண்டு வருவதற்க்கு ஏழரைச்சனி அதிகமாக எடுத்துக்கொண்டால் மொத்த வாழ்வும் சிதைந்துவிடும். நடைமுறையில் கர்மா போகட்டும் என்று இருக்கமுடியாது.
ஒவ்வொரு குடும்பத்திலும் நிறைய சிக்கல்களை ஏழரைசனிக்காலத்தில் ஏற்படுத்திவிடும். உங்களின் துணைக்குள்ளேயே உங்களுக்கு சண்டை சச்சரவு ஏற்படுத்திவிடும். இதிலும் எச்சரிக்கையோடு இருந்தால் மிகவும் நல்லது.
ஏழரைச்சனியைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். அவ்வப்பொழுது உங்களை காப்பாற்ற இப்படிப்பட்ட விசயங்களை சொல்லவேண்டி இருக்கின்றது. ஒரு முறை திருநள்ளாறு சென்று நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment