Followers

Thursday, June 28, 2018

வேலையாட்கள் அமையும் யோகம்


வணக்கம்!
         இன்றைய காலத்தில் ஒரு தொழில் செய்வது என்பது அவ்வளவு பெரிய கஷ்டம் என்று சொல்லலாம். கையில் இருந்து பணத்தை போட்டாலும் சரியான வேலையாட்கள் கிடைக்காது. வேலையாட்கள் ஏட்டிக்கு போட்டியாக அமைந்துவிட்டால் தொழில் நஷ்டத்தை சந்திக்கும்.

பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் முதலாளியால் ஏற்பாடு செய்வார்கள் ஆனால் அந்த தொழிலை நடத்தும் வேலையாட்கள் கிடைப்பதில் தான் பெரிய கஷ்டாக இருக்கும். நல்ல வேலையாட்கள் கிடைத்துவிட்டால் தொழில் வெற்றியை நோக்கி சென்றுவிடும்.

ஒரு தொழிலுக்கு நல்ல வேலையாட்கள் கிடைக்க அவர்களின் ஜாதகத்தில் ஆறாவது நன்றாக இருக்கவேண்டும். நமக்கு வரும் வேலையாட்களை காட்டக்கூடியது ஆறாவது வீடு. ஆறாவதுவீட்டு அதிபதி மறைவுஸ்தானத்திலேயே இருந்தால் பெரும்பாலும் நல்ல வேலையாட்கள் கிடைக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் வைத்து இதனை சொல்லுகிறேன். வேலையாட்கள் அமைவதற்க்கு தொழில் நடத்தும் நபர்களின் ஜாதகத்தில் ஆறாவது வீட்டு அதிபதி மறைவுஸ்தானத்தில் அமரும்பொழுது நிறைய நல்ல வேலையாட்கள் கிடைக்கின்றனர்.

ஒரு சிலருக்கு ஆறாவது வீட்டு அதிபதி லக்கினாத்தில் அமர்ந்தால் அவர்களுக்கும் நல்ல வேலையாட்கள் கிடைக்கின்றனர் மற்றபடி எங்கு அமர்ந்தாலும் வேலையாட்கள் கிடைப்பதில் குதிரை கொம்பாக அமைந்துவிடும்.

பல கம்பெனிகள் திவாலாகி போனதற்க்கு அவர்களின் வேலையாட்களும் சரியாக இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஒரு சில கம்பெனிகளை முதலாளியை ஆட்டை போட்டு வேலையாட்கள் எடுத்ததும் இருக்கின்றது. இதற்கு அனைத்தும் காரணமாக இருப்பது அவர் அவர்களின் ஜாதகத்தில் ஆறாவது வீடு செய்யும் வேலை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: